Arunachaleshwarar
திருவண்ணாமலை - கிரிவலம்

திருவண்ணாமலை - கிரிவலம்

திருவண்ணாமலையின் இரகசியம்

கிரிவலத்தின் போது சிவத்தின் ஆயிரம் போற்றியை துதி செய்து கிரிவலம் வாருங்கள். இந்த நாமத்தை படிக்க முடியாதவர்கள் ஒருவர் முன் உரைக்க பின் வருபவர்கள் போற்றி சொல்லி கிரிவலம் வாருங்கள்.

பௌர்ணமி நாட்களில் தான் கிரிவலம் வர வேண்டும் என்று இல்லை, எல்லா நாட்களிலும் இறைவனை தரிசித்து கிரிவலம் வரலாம். அருணாசலத்தின் இறைவன் அருவமாகவும், அருஉருவமாகவும் உருவமாகவும் உள்ளார். எல்லா நாட்களும் கிலிவலத்திற்கு உகந்த நாட்களே, பௌர்ணமி அல்லாத மற்ற நாட்களில் அருணாச்சல மண்ணில் கால் வைத்து மலை, கோவில் கோபுரம், நிலவு மூன்றையும் தரிசித்து ஆயிரம் துதியை சொன்னாலே போதும் (கிரிவலம் வர முடியாதவர்கள்) மனமுUகி சொல்ல கிரிவலப்பலனை பெறலாம். மனதால் மலை, கோபுரம், நிலவு, ஜீவசமாதி, சிவனடியார்கள் நினைவில் கொண்டு துதி செய்து மானசீகமாக மூன்றுமுறை வலம் வாருங்கள் (கிரிவலம் சுற்ற முடியாதவர்களுக்கு மட்டும்).

இது மெய்ஞான பூமி என்பதை மறவாதீர்கள். உலகிலே இதுபோன்ற இடம் ஒன்றுமில்லை. கயிலையில் கூட தரிசனம் மட்டுமே. மகான்களை சென்று பார்ப்பது தரிசனம் தான். அதுபோல் கயிலையில் பார்ப்பதும் தரிசனம் தான். கயிலாயம் என்பது பூலோக கயிலாயம்தான். நாம் வான் கயிலாயம் செல்ல வழிகாட்டி (முக்தி தருவது) திருவண்ணாமலை மட்டுமே. நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலையே. யோக கனலாகிய ஆக்ஞை, அனாதகம், மணிபூரகம் மூன்றையும் சேர்த்துக் கூட்டி, மூட்டும் தீயில்தான் அமிர்தம் சமைக்கப்படுகிறது. அந்த அமிர்தம் சஹஸ்ர தளத்தில் ஊற்றெடுக்க செய்து நாம் உண்ண வேண்டும். இதை உண்டு வாழ்பவர்கள் உள்ளொளி பெருகி சிவ ஜோதியாகி, கபால உச்சியின் வழியாக மெய்வாசல் திறந்து இறைவனை அடைவர். யோகம் என்னும் ஜூவன் முதிர்ச்சி அடைந்து ஜீவமுக்தி நிலையை அடைகிறது. இதன் விளைவால் அமிர்தம் விலகி கபால வாசல் திறக்கும். உச்சியின் இந்த வாசலே -கயிலாய வாழ் சிவபதியின் மூல வாசல் என்பார்கள். இதை சிவபதம் என்பார்கள், அதாவது முக்த நிலையை. பதம் என்றால் பக்குவம். உடலும், மனமும் பக்குவப்பட்டு சிந்தித்து த்து சிவத்துடன் இரண்டற கலக்கிறது. அருணாச்சலம் ஒரு யோக பூமி, ஒரு கர்ம பூமி, சித்த பூமி, ஞான பூமி, யோகம் தரும் பூமி, சித்தர்கள் பூமி, ஜோதி பூமி, சிவனடியார்கள் பூமி, மாயையின் வெற்றியான மயான பூமி, ஜீவ சத்தெடுக்கும் தவ பூமி, முக்தியின் வழிதேடும் ஜீவமன பூமி, ஆயர் கலைஞனின் தப பூமி, ஆகாய தர்ஷன் பூமி, பூமியின் பெருமையை சொல்ல இயலாது ஒப்புயர்வில்லா அருணாச்சலத்தின் (கயிலாயமாக காட்சியை பனிகாலமாக பனி காலத்தின்) வெண்பனி மூடிய மலையே கயிலாயமாக காட்சி தரும். சூரிய உதயத்தில் பொன்மலையாக காட்சி தரும். இங்கு விண்ணவர்கள் கூடி தொழுகின்ற நிகழ்ச்சி பனிமூடிய நேரங்களில் நடைபெறுகிறது. இங்கு மட்டும் கிருஷ்ணபட்சி அண்ணாமலை கோபுரத்தை வலம் வருவதை அதிகாலையில் காணலாம். சித்தர்கள் பட்சியாக மூலகோபுரத்தை வலம் வருவதையும் காணலாம். ஈடு இணையற்ற அருணாச்சலத்தைப் போற்ற உடல், மனம், புத்தி உருகி துதி செய்து, இறைவனை சிந்தையில் குடி கொள்ளச் செய்யுங்கள்.

இறைவன் சிந்தையில் குடி கொள்ளட்டும். யோகம் என்றும் ஜீவன் முதிர்ச்சி அடைந்து, ஜீவமுக்தி நிலையில் இந்த அமிர்தம் வழிய, வாசல் திறக்கும். உச்சியில் இந்த வாசலே கயிலாயம் வாழ் சிவபதியின் மூல வாசல். இதை சிவபதம் என்பார்கள். பாதம் என்றால் பக்குவம். உடல், மனம், பக்குவப்பட்டு சித்தத்தில் சித்தித்து சிவத்துடன் கலத்தல். இது மெய்ஞானபூமி என்பதை மறவாதீர்கள். உலகிலேயே இதுபோன்று இடம் ஒன்றும் இல்லை. கயிலை கூட தரிசனம் தான். மகான்களை சென்று பார்ப்பது தரிசனமே. தரிசிக்க உகந்த இடம் கயிலாயம். இது பூலோக கயிலாயம். நாம் வான்கயிலாயம் செல்ல வழி திருவண்ணாமலை மட்டுமே. ஆனால் திருவண்ணாமலை மட்டும் நினைத்தாலே முக்தி ஆகும். யோகக்கனல் ஆகிய ஆக்ஞை, அனாதகம், மணிப்பூரணம், மூன்றையும் சேர்த்து கூட்டி மூட்டும் தீயில் தான் அமிர்தம் சமைக்கப்படுகிறது. அந்த அமிர்தம் சகஸ்ரத்தில் ஊற்று எடுக்க செய்து உண்ண வேண்டும். இதை உண்டு வாழ்பவர்கள் உள் ஒளி பெருக்கி சிவ ஜோதியாகி கபால உச்சியின் வழியாக மெய் வாசல் திறந்து இறைவனை அடைவர். அருணாச்சலம் ஒரு யோக பூமி, கர்ம பூமி, சித்த பூமி, ஞான பூமி, போக பூமி, தரும பூமி, சித்தர்கள் பூமி, சிவனடியார்கள் பூமி, மலையின் மயான பூமி, ஜீவசத்து எடுக்கும் தப பூமி, முக்தி வழி தேடும் பூதகண பூமி, ஆயர்கலைஞர்களின் பூமி, ஆகாயதரிசன பூமி ஆகும்.

அன்பே வடிவான மெய் பொருள் தோற்றமே- திருவண்ணாமலை, தோன்றும் அருணாச்சலம் அருணபுரி, அருணகிரி, சோணத்திரி ஜோதி யுகமலை என பல பெயர் உண்டு. கிருதா யுகத்தில் அக்னி மலை, திரேதா யுகத்தில் மாணிக்க மலை, துவாரக யுகத்தில் பொன் மலை, கலியுகத்தில் கல் மலை.

ஒவ்வொரு ஜீவ ராசிகளிலும் பிரம்மம் உள்ளது. அது ஜோதி மயமாக உள்ளது. ஜீவனில் பிரம்மத்தை அறிந்து, மதித்து நடப்பவன் மட்டும் ஞானி. மனித உயிர் ஜோதியாகினால் தான் முக்தி என்பதை நினைவூட்டுவது அருணாச்சலமே. பஞ்சாக்கினி தவம் செய்ய ஏற்ற இடம் திருவண்ணாமலை

ஒருமுறை பார்வதி தேவியார் சிவனிடம் கயிலாயத்தை விட திருவண்ணாமலை எந்த விதத்தில் மகிமை வாய்ந்தது என வினாவ, 'எனக்கு நிகரானது பஞ்சாச்சரத்தின் ஒப்பான மந்திரம், சைவத்திற்கு ஒப்பான சமயம், பொல்லாத பாவங்களை தீர்க்கும் தலம் அருணைத்தலம். இதற்கு ஈடாக உலகில் வேறு இல்லை. அருண பூலோக கயிலாயம் பூதகணங்களே நித்தம் வாசம் செய்கிறேன்' என்றார்.

கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் மலை உச்சியில் ஒளி காண்போம். அதனை தரிசிப்பவர்கள் பசி,பிணி, நோயும் அகலும். இதை கண்ட அரசர், தபசுகள் இடையூறு நீங்கும். ஜோதியை கண் பார்த்து, காதால் கேட்டு வாய்துதித்து, மனதால் நினைத்தால் பாவங்கள் போகும். இங்கு வழியும் பிறக்கும்.

மலை சுற்றி சப்த கன்னிகள் காவல் புரிகின்றனர் - பிரமானி, உருத்திராணி, நாராயணி, வராகி, கௌமாரி, காளி, இந்திராணி மலை சுற்றி காவல் தெய்வங்கள். பைரவர், ருத்திரர் பூத கணங்கள் அம்மாவாசையில் இறைவனை போற்றி துதி செய்து கயிலாயம் செல்ல பலகாலமாக வழிபாடு செய்கின்றனர்..

வெள்ளாள மகாராஜ் - கோயில் கட்டியவர், மகாராணி சல்லம்மாதேவி ராணி. இன்றும் பள்ளி கொண்டாபட்டில் வேள்ளாள மகாராஜனுடைய ஈமகிரியை வருடந்தோறும் அருணாச்சல ஈஸ்வர் செய்து வருகிறார். ஈஸ்வரனே குழந்தையாய் அவதரித்த ஸ்தலம் அருணாச்சலம்..

தீர்த்தங்கள்

அருணாச்சலமலை திருமேனியில் இருந்து வரும் நீரே அருணாச்சல தீர்த்தம். தீர்த்தம் பிறவி துன்பம் நீக்கும். ஈசனின் பாதார விந்தத்தை அடையலாம். இது நந்தீஸ்வரர் வாக்கு.

கிழக்கில் - இந்திர தீர்த்தம்

தென் கிழக்கில் - அக்னி தீர்த்தம்

தெற்கில் - யம தீர்த்தம்

நிருதி மூலையில் - நிருதி தீர்த்தம்

மேற்கில் - வருண தீர்த்தம்

ஈசான்யத்தில் - அஸ்வினி தீர்த்தம்

தென் பாதத்தில் சோணை நதியும் உள்ளது. பெரிய மலைமேல் மலைப்பால் தீர்த்தமும் உள்ளது.

எட்டுக்கும் அட்டதிக்கு பாலகர் பூஜித்த அட்ட லிங்கம்,

கிழக்கு - இந்திர லிங்கம் - இந்திரன் பூஜித்தது

தென் கிழக்கு - அக்னி லிங்கம் - அக்னி பகவான் பூஜித்தது

தெற்கில் - யம லிங்கம் - யம பகவான் பூஜித்தது

நிருதி மூலையில் - நிருதி லிங்கம் -வருணன் பூஜித்தது

மேற்கே சூரிய லிங்கம் - சூரிய பகவான் பூஜித்தது

வாயுதிக்கில் - வாயு லிங்கம் - வாயு பகவான் பூஜித்தது

வடக்கில் - குபேரலிங்கம் - குபேரன் பூஜித்தது.

ஈசான்யத்தில் - ஈசான லிங்கம் - ஈசனே தோன்றியது

அஷ்ட லிங்கம் அருணாச்சலத்தில் உள்ளது.

ஈசனே நந்தியம் பெருமானுக்கு 2 காத தூரம் சுமார் 25 மைலுக்கு அவ்வப்போது நானே குருவாக தோன்றி பூ உலக மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பேன் என கூறி உள்ளார்.

குரு நமசிவாயர்

குகை நமசிவாயர்

இடைக்காடர்

திருவண்ணாமலை தீபம்

சச்சிதானந்த பரபிரம்மத்தை மலையில் ஜோதியாக காட்டுகிறார்கள். மனித உயிர், ஆணை என்றும் மாயை அறுத்து இறை ஜோதியுடன் கலக்கும் இடமே இது. உலகில் மிக பெரிய பாணரூபமாய் உள்ள மலை திருவண்ணாமலையாகும். திருவண்ணாமலையில் எல்லாம் வல்ல சித்தன் உள்ளார்.

தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
தொடரும்...
நிகழ்வுகள்

தியானேஷ்வர் நித்திய கால பூஜை விவரம்்


திங்கள்- திருமதி லதா ராஜேந்திரன் அவர்கள்


செவ்வாய் - திரு தயாளன் அவர்கள்


புதன்- திருமதி சுனிதா பாபு அவர்கள்


வியாழன் - திருமதி உமா காமாட்சி நாதன் அவர்கள்


வெள்ளி - திரு மோகன் அவர்கள்


சனி - திருமதி சாந்தி (உமா மகேஸ்வரி) அவர்கள்


ஞாயிறு - திரு குமரேசன் அவர்கள்


தியானேஷ்வர் அபிஷேக அலங்கார ஆராதனை


கோவில் பராமரிப்பு மேற்பார்வை

1. திருமதி லதா ராஜேந்திரன் அவர்கள்


2. திருமதி சாமுண்டீஸ்வரி பொன்னுரங்கம் அவர்கள்


அன்னதானம் சிவஸ்தல வழிபாடுக் குழு நடத்துனர்கள்


1. திரு. ரமேஸ் செல்லையா
(சிசிபில்டர்ஸ்)    Mobile:8754043401


2. திரு. பரத் குமரன் (Magic Bite)   
Mobile: 9789859857


கைலாய வாத்தியக் குழு வழி நடத்துனர்


1. திரு. சிவதாஸ்
    Mobile: 9444813781


go back to the top