Arunachaleshwarar
மௌனம்

ஓம் பரி பூரணத்துவ மாதா
ஓம் பரி பூரணத்துவ பிதா
ஓம் பரி பூரணத்துவ குரு
ஓம் பரி பூரணத்துவ தியானேஸ்வர்மௌனத்திலும் ஒரு மந்திரமான தந்திரமே மன மௌனம். பேரானந்த பேறு நிலைக்கு வழிவகுக்கும். உள் ஆனந்தம் விரையம் ஆகாது. ஆண்டவனுடன் பிணைந்தும் தொடர்ந்தும் இருக்க வல்லது- மௌனம். மௌனத்தில் உலகத் தொடர்பை மறந்தால் பேரானந்த பேறு நிலை கிடைக்கும். மௌனமாக இருந்தால் தியானமும் தேவையில்லை. அங்கு வெளித்தொடர்பு துண்டிக்கப்படுவதால் மனம் ஒருமுகப்படுகிறது. மௌனத்தில் இருப்பவர்கள் - தியானம் பயின்றவர்க்கு மட்டும்- அமைதி சாந்தி சந்தோஷம் அதிகமாகவே இருக்கும். இதுபோகப் பொருள் அல்ல. போகத்தில் இருந்து தியானிக்காது இருப்பவனுக்கு அமைதியின் அருமை தெரியாது. ஜபம் தியானம் என்பது மேன்மையான மேல் நிலையே. இது பக்தியில் இருப்பவருக்கு சாராது. தியானம் - இறைவனை பிரியாது இருக்கும் நிலை. மனமும்இ அறிவும் எண்ணமும் சேர்ந்து பரம் பொருளில் வயப்பட்டு இருக்கும் நிலையே தியானம்.

சிவ தியானம்


    தி - அக்னி
    யானம் - பாத்திரம்
அனல் உடலின் ஆழம் மன கனலை சமைக்கவல்ல பாத்திரம். கனல் பாத்திரம் உலைக்கலனே. தியானத்தில் இருப்பவர்கள் முதல் 3 வருடம் காலை 3.00 மணிமுதல் 8.00 மணி வரை மௌனத்தில் இருத்தல் வேண்டும். இது பிரம்ம முகூர்த்தம் தாண்டிய மௌனநிலை. இறை நாமத்தை ஜெபிப்பதன் மூலமாக அமைதியை உருவாக்குங்கள். மூளை சூடு என்னும் டென்ஷன் இல்லாது இருக்கும்.
டென்ஷன் இல்லாது இருந்தால் நோயின்றி இருக்கலாம். 72 ஆயிரம் நாடி நரம்புகளும் அமைதியுற்று இருப்பதால் தேகம் ஆரோக்கியம் பெறுகிறது. அடுத்த மூன்று வருடம் மாலை 3.00 மணி முதல் 8.00 மணி வரை மௌனத்தை கடைபிடியுங்கள் வீண் குழப்பம் வராது.
அடுத்த 3 வருடம் நாள் முழுவதும் தியானத்துடன் கூடிய மௌனம் - தனிமையை எடுத்துக் கொள்ள வேண்டும்.(தியானம் மௌனம் கூடிய இவ்வேளையில் இறைவனை தேட வேண்டும்).
அடுத்த 3 வருடத்தில் தேவை ஏற்பட்டால் மட்டும் ஆபத்துக்கு ஒன்றும் அவசரத்துக்கு ஒரு வார்த்தை மட்டும் பேசுங்கள். முழு மௌனியாக பயிற்சி பெற்று இறை சக்தியை உடலில் தேக்க மௌன பயிற்சிறினை ஆண் பெண் இருவருமே செய்யலாம். இருவரும் ஒரே நேரத்தில் இருப்பதும் நன்றே

தியான மௌனத்தின் போது உலக விஷங்களை பேசாதீர்கள். தெய்வீக புத்தகம் தெய்வீக மனிதர்களுடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். கோவில் தரிசனமும் நன்று. அதுவும் நெடு நேர பயணமாக இருக்கக்கூடாது. அமைதி வாய்ந்த கோயிலாக இருக்க வேண்டும். 1.00 மணி நேரம் முதல் 3.00 மணி நேரமாவது தொடர்ந்து மௌனமாக உட்கார்ந்து பழக வேண்டும்.
தெய்வீக கனல் உள் இறங்கும் போது- உடலில் (மெய் சிலிர்க்கும் நிலை) மயிர்கள் துடிக்கும். இவ்வாறு உட்காரும் வேளையில் முதலில் உங்களுக்கு கொடுத்த மந்திரத்தை சொல்லி உருஏற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் இவ்வாறு உரு ஏற்ற ஏற்ற மந்திரப் பலன் பெறும். அத்துடன் செல்வாக்கு திறனும் கூடும். இத் தகுதி மனம் மெய் உடல் சுத்தமானவர்க்கே. ஏனெனில் ஐம்புலக்கருவிகளை தன் வசம் அழைத்து மனதுடன் கட்டாது (இணைக்காது) இருந்தால் எந்த முன்னேற்றமும் இருக்காது.
மௌனத்தில் மாயை விலக்க முடியும். மௌனம் ஒரு தெளிந்த நீர் ஓடை உறவுகளுடன் உயிரினங்களுடன் உறவாடும். தெளிந்த நீரில் தான் உன் பிம்பம் தெரியும். தெளிந்த நீரில் உள் படிமானம் தெரியும். தெளிந்த நீரில் ஆழம் தெரியாது. அதுபோல கலங்கி விட்டால் எதுவும் தெரியாது. உலக இன்பத்தில் இருப்பும் பிடிப்பும் உள்ளவர்க்கு -அதன் மன ஆழமும் மன தெளிவும் இருக்காது. மனத் தெளிவு கொண்டவன் மட்டுமே மாசற்றவனாக இருக்க முடியும். உலக இயல்புக்காகவும் உலக நிகழ்வுக்காகவும் உலகப் பொருளுக்காகவும் உலக உயிர்களுக்காகவும் அழுகின்றவன்- இவன் ஒருபோதும் கடவுளைக்காண முடியாது. உலக இன்பத்தில் திளைத்து அன்பு பிரிதலில் வாடுகிறவன் (அழுகிறவன்) ஒரு போதும் ஆண்டவனை நெருங்க முடியாது. ஏனெனில் மாயையில் விழுந்து மாயையால் இவர்கள் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இந்த மாயையினால் நாம் அறிய முடியாத மறைபொருளையும் காண முடியாது.
இறைவன் பால் அன்பு கொண்டு இறைவன் பால் ஏக்கம் கொண்டு இறைவனை முழுமையாக உணரத் துடித்து இறைவனை தன்னுள் கொண்டு வர வேண்டும். இறைவனை வெளியில்காண தேடி மனதில் அழுது புலம்பி அவனையே நினைத்துக் கொண்டு இருப்பவர்க்கு- அவன் காட்சி தருவான். காரண காரியமாகியவன் கர்மவினை முடியும் வரை விலகியும் இருப்பது உண்டு. இறைவனுக்காகவே வாழ்பவன் தனது இன்ப துன்பங்களில் விலகியே இருப்பான். உடல் மனம் அறிவும் இன்பத்திலும் துன்பத்திலும் பாதிப்பது இல்லை. அவனது முழு குறிக்கோளும் இறைவனை அடைவது மட்டுமே. இந்நிலையை உடையவர்க்கே இறைதரிசனம் கிடைக்கும். இந்நிலையில் இல்லாதவர். இறைவனை தொழுதும் தேடியும் திரிவர். இன்பத்தில் இணைந்தும் துன்பத்தில் தூற்றியும் திரிவர். உலகப்பொருள் நாட்டத்தால் கோபம் கொண்டு வாயால் வசைபாடுவார்கள்.
உண்டதும் யாராலே உழைப்பும் யாராலே என்பதை மறந்தவர்களுக்கு இறைதரிசனம் கண்டிப்பாகக் கிட்டாது. இவர்கள் இறைவனை கண்டதாகவும் கண்டதையும் கூறி திரிவார்கள் இறைவனை கண்ட மனம் கலங்காது - என்பதை அவர்களே அறியமாட்டார்கள. ஏனெனில் எண்ணங்கள் எண்ண சிதறலாகும் போது இறைவன் தெரியமாட்டான். இதற்கு காரணம் இறைவன் தரிசனம் கிட்டியவர்கள் மிகவும் சொற்ப அளவினரே ஆகும். இறை மனங்கொண்டவர்கள் எண்ணங்கள் சிதறாமல் இருப்பதற்கு - சூரிய ஒளிக்கற்றையால் ஒளிப்பிழம்பு சூடு ஏறி நெருப்பாகுவது போல் - தீய எண்ணங்களும் எரிக்கப்பட்டுஇ அவ்ணெணங்கள் ஆழ் மனம் செல்லாது இறைவனால் தடுக்கப்படும்.
ஆழ்மனம் செல்லாத மனது இறைதரிசனம் பெறாது. காரணம் எண்ணம் குணம் செயல் சொல் எல்லாம் கண்ணாடி போல் ஒரு தடைவை உடைந்தால் மீண்டும் பொருந்தாது. இதே போல் கண்ணாடி பல நூறாக உடைத்து ஒட்டினால் முகம் பார்க்க முடியாது. உங்கள் வார்த்தை எண்ணங்கள் பிறர் மனதையோ உங்கள் மனதோ உடையக்கூடாது. உலக இயல்பியலில் விலகியும் இருக்க வேண்டும். செயல் இயக்கம் குறைக்க வேண்டும். செயல் இயக்கம் குறைக்க - தேவையை குறைக்க வேண்டும். தேவையை குறைக்க மனங்கட்டுப்படுத்தப்பட வேண்டும். மனங்கட்டுப்பட ஜம்புலனையும் ஓர் இடத்தில் நிறுத்தச் செய்ய வேண்டும். ஜம்புலன் நிறுத்த ஓர் இடத்தில் அமர வேண்டும். ஓர் இடத்தில் அமர்ந்து இறைவனை தியானிக்க வேண்டும். இறைவனை தியானிக்க மனம் ஒருமுகப்படும் போது மனதில் ஒரு முகமாய் தெரிவான் இறைவன்.
இறைவனை தெரிந்து கொள்ள மௌனமாய் தெளிந்த நீர் போல் இருங்கள். மனம் எண்ணங்கள் இல்லாது தியானிக்க இறைவன் மட்டும் அல்ல அனைத்தும் நம் வசம் ஆக்குவான். நம் உள் இறைவன் வந்து விட்டால் ஞானம் மிளிரும். ஆணவம் என்னும் அகங்காரம் குரோதம் காமமும் விலகும். சாந்தம் பிறக்கும். உன்னைச் சுற்றி நறுமணமலர் தேடி வரும் வண்டு தேனி போல் உன்னைத் தேடி வருவர். இதுவே தெய்வீக வெளிப்பாடு. இறைவனை நம்முள் மூடி மறைக்க முடியாது. இறைவன் அணையா நெருப்பு (ஜோதி). அது கனன்று எரியும் போது எப்பொமுதானாலும் மூடி மறைக்க முடியாது. எதையும் பஸ்மமாக்கும் பரிசுத்தம். ஆதலினால் அது போன்ற இறைஜோதியை மூடவே முடியாது. மூடாத ஜோதி பிரகாசிக்கும். அதுவும் தியானத்தில் பிறந்த மௌனத்தில் மட்டுமே.
இந்த ஜோதி ஆடாமல் அசையாமல் எரிய காற்று தேவை இல்லை. அதே போல் ஜோதி பிரகாசிக்க எண்ணம் தேவையில்லை. சுடர் அசையாது இருப்பது போல் மனம் ஓடாது இருக்க வேண்டும். மனம் ஓடாது இருந்தால் இறைவனே வந்து உன்னிடத்தில் மாட்டிக் கொள்வான்.
நீ காணும் பொருள் இறைவன் காணாத பொருள் மௌனத்தில் காணாத பொருளை காணக்கரிய பொருளை பிறவாத நிலை பொருளை பலவும் பலவான பொருளை விளைவே இன்றிய பொருளை நம்மையே பார்த்துக் கொண்டிருக்கும் பொருளை ஊனக்கண்மூடி ஞானக்கண்ணால் கண்டுபிடி மௌனம் எல்லாக் கிரியைகளிலும் சாலச்சிறந்தது. இந்த மௌனம் உலகத் தொடர்பை அறுக்கவே!
வெளிச் செயல் நிறுத்தவே இதனால் மனம் மேல் ஓங்கியே இருக்கும். இந்நிலை மிகவும் உயர்ந்த நிலையாகும். இந்நிலையில் இருக்க முயலுங்கள்.

காயத்ரி மந்திர பெயர் விளக்கம்


காயத்ரி மந்திரத்தின் பெயர்
1. காயம் - உடல்
     திரி       - இணைப்பது ஆகும் மற்றொன்று
2. காய - பக்குவம்
      திரி -      உடல்இ மனம் மந்திரத்துடன் இணைப்பது. 3. காய - உடல்
      திரி -      உயிர் ஆன்மாவை அறியச் செய்யும் மந்திரம்.


காயத்ரி மந்திரம் சூரிய நமஸ்காரத்தில் தொடங்குகிறது. சூரியனை துதி செய்யும் மந்திரம். ரிஷி முனிவர்கள் யோகிகள் தபசிகள் தங்கள் காயத்ரியை உபயோகிப்பர். குளம், ஆறு ,கடல், முன், நின்று சூரியனைப் பார்த்து மந்திர பிரயோகம் செய்வார்கள். சூரிய நமஸ்காரம் (காலை வணக்கம்) சந்தியா வந்தனம் (மாலை வணக்கம்) செய்வார்கள். இறைவனை பூஜிக்கும் பொழுது சூரியனைப் பார்த்தே பூஜிக்க வேண்டும். சான்றோர்கள் கற்று தந்த சாஸ்திரமும் சூரியனை தொழுவதே முதல் விதிமுறையாகக் கூறப்பட்டுள்ளது.


காயத்ரி மந்திரம்


காயத்ரி என்னும் தேவியுடன் நம்மை பிணைத்துக் கொள்ளும் மந்திரம் ஆகும். காயத்ரி துதி சகல தேவன் தேவியின் அருளைப் பெறவும் வழி செய்கிறது. காயத்திரி காயமாகிய உடலை சொல், செயல், பலன் ஆகிய மூன்றின் பலனையும் மேம்படுத்தவே பயன்படுத்தப்படுவதாகும். காயத்ரி காயத்தை கர்மம் என்னும் வினைத் தொடர் தொடராது இருக்கவும், கர்ம வினைப் பாதிப்பை இலகுவாக்கவும் காயத்ரி பிரயோகிக்கப்படும்.
காயத்ரி காயத்தை வெல்லக்கூடிய மந்திரத்தை மிக தந்திரமாகவே சொல்ல தரப்பட்டதாகும். காரணம் சொல், செயல், பலன் மூன்றும் கர்மம் ஆகும். கர்ம பலன் யாவும் நமக்கு நலமாகவே பயன்படுத்தப்படுகிறது. மனம், மெய் இரண்டையும் காயத்தில் திரித்து கல்ப்பம் ஆக்கும் வித்தை காயத்ரி.

சூரிய நமஸ்காரத்தின் விளக்கம்


சூரிய வழிபாடு - நம் முன்னோர்கள் வழிபாடு ஆகும். இயற்கையை வழி பட்டாலும் சூரிய வழிபாடே முதன்மையாக இருந்தது. உலகம் தோன்றி முதல் குடிமகனின் பழங்கால வழிபாடும் சூரிய வழிபாடே ஆகும். இதன் ரகசியத்தை நாம் உணரவில்லை. உருவம் அற்ற கடவுளைக் காணவே சூரியனை வழிபட்டனர் என்பதே ரகசியமாகும்.
இன்றும் பழங்குடியினர், உழவர்கள் செய்யும் வழிபாடும் சூரிய வழிபாடே ஆகும்.
சந்திர வம்ச சூரிய வம்ச வழி மன்னர்களும், மக்களும் சூரிய வழிபாட்டையே செய்தனர். பல கோயில்களில் சூரியனைச் சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர். சில மத மக்கள் தங்கள் முத்திரையாக சூரியனைச் சின்னமாக வைத்திருக்கின்றனர். இன்றும் இல்லங்களில் சூரிய வழிபாடு செய்கின்றனர். இதன் ரகசியம் பரமனின் ரகசியமாகும். 1. இறைவனுக்கு விளக்கு ஏற்றி வழிபடுவது ஜோதி வழிபாடு ஆகும். இறைவனுக்கு பின்னும் இறைவனுக்கு முன்னும் ஜோதி ஏற்றப்படுகிறது. படத்தில் இருக்கும் இறைவனை விளக்கு ஏற்றி ஜோதியில் காண்கிறோம். விளக்கில் உள்ள ஜோதியில் படத்தில் உள்ள இறைவனைக் காண்கிறோம்.
2. கோயிலில் இறைவன் அருவமாகவோ உருவமாகவோ உள்ளார். கோயிலில் உள்ள இறைவனைச் சுற்றி அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கும். பின் கற்பூரம் நெய்தீபம் காட்டப்படும். அருவமும் உருவமுமாக உள்ள இறைவனை ஜோதியில் காணவே இறைவனைச் சுற்றி தீபம் ஏற்றப்படுகிறது. இரண்டாவது நாம் இறைவனைக் காணும் பொருட்டு தீபம் ஏற்றபடுகிறது. மூன்றாவது இறைவனுக்கு கற்பூரம்(நெய்விளக்கு) காட்டி ஜோதியை நம்மிடம் எடுத்து வந்து தரிசிக்க செய்கிறார்கள். இறைவனை ஜோதி வடிவாக தரிசனம் செய்யவே இந்த முயற்சியாகும்.

சிவ காய மந்திரம்


சூரிய ஜோதி நெருப்பானது, அகண்டத்தின் விளக்காகும். சூரிய ஜோதிக்கு பின் பரந்து விரிந்த பரம்பொருள் உள்ளது. இந்தப் பரம்பொருள் நாம் தொழுவதற்கு இறைவனால் ஏற்படுத்தப்பட்டதாகும். இயற்கை விளக்கு சூரியன். மெய்யே மெய்யை அறிய முடியும். மெய் அறிய வேண்டுமாயின் தியானம் செய்ய வேண்டும். கண் மூடியே காண்பாய் அனைத்தையும், மூக்கில்லாது மூக்கின் பின்னே ஓடுவாய் வாசியாக, காதுகள் மூடி திறந்தே உனதுள்ளே கேட்பாய், வாய் அசைவின்றியே அமைதியுறும். மனம் தன்னை அல்லாது வேறு ஓர் பொருளை உணரும் கைகள் அவன் கைகளாக மாறியே இருப்பதாக உணரும். கால்களின் உணர்வு அவனாகவே வியாபித்திருக்கும். முழுமையாய் நீ நீயாக அல்லாது அவனாக இருப்பதை உணர்ந்து கொள்வாய். அதுவே மெய் உணர்வு முதல் நிலை. இதுவே கடவுள் நிலை இந்நிலையில் நீ கடவுளாகிறாய்.

சிவ தியானம்


இறை நாமத்தை ஜெபமாக ஜெபிக்க வேண்டும். இறை நாமத்தை இடைவிடாது தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். நீ அவ்வாறு ஜெபிப்பாயின் அது ஓர் இடத்தில் நின்று விடும். இந்நிலையில் உன் கவனமே மனம் விழிப்பாக மாறும். நீயே மனம் விழித்த நிலையை உணர்வாய் . ஜபம் செய்வது ஜெபத்தை கேட்பது உயிரில் உள்ள ஆன்மாஆகும். இந்நிலையில் நீ உணரும் பொருளே பிரம்மம்இ நீயே பிரம்மம்.இந்நிலையே சிவ நிலையாகும். சிவ நிலையில் சிவனே என்று இருப்பது ஆகும். ஆனால் சிவனாகி இருக்க வேண்டும். சிவ விதி முறைகளோடும், சிவ சூத்திரங்களோடும், சிவ மந்திரங்களோடும்
சிவ சிந்தனை தவிரஇ வேறு எதையும் ஆற்றாது அதுவாகிப் போவதே சிவ நிலையாகும்.


சிவ நிலை


மெய் பொருளைக் காண உலகில் உள்ள எந்த பொய் பொருளும் தேவை இல்லை. உலகில் உள்ள எல்லாப் பொருளும் ஒரு நாள் அழியும். ஆனால் சிவப் பொருள் என்னும் பேர் ஆன்மா அழிவது இல்லை. இதுவே மெய் பொருள். இந்த மெய் பொருளே உருவம் அற்ற சிவ பொருள் நம்முள்ளே இருக்கிறது, இதைக்காணதான் நாம் முனைய வேண்டும். இதற்கு முழுப் பிரயத்தனமுடன் நாம் செயல்பட வேண்டும்.
மெய் பொருளைக் காண எந்த உபகரணமும் உதவ முடியாது. அதைக் காண இறைவனே உதவ வேண்டும். அதுவே இறைவன் நாமமாக சிவபுராணம் சொல்கிறது. ''சிவன் அவன் என் சிந்தையில் புகுந்ததனால் அவன் அருளாளே அவன் தாழ் வணங்கி'' சிவம் நம் சிந்தையில் புகுந்ததால் சதா சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு நாம் இருந்தாலும் இறைவன் அருள் இருந்தால் தான் இறைவனையே வணங்க முடியும். இறைவனை சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் தபநிலைகூட வாய்க்கும். மனதில் எவ்வாறு சிந்திக்க வேண்டுமென்றால் தபத்தில் இமைப்பொழுது கூட நீங்காது சிந்திக்க வேண்டும். இதையே சிவபுராணம் "இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க" என்று கூறுகிறது. இந்நிலையை கடைபிடியுங்கள், அப்போதுதான் தபத்தில் வெற்றி அடைய முடியும்.


சிவ சூத்திரம்


சிவனை அடைய பல வழிகள் இருப்பினும், சிவனுக்கென்று வரும்போது அது தனிவழியான பாதையே ஆகும். சிவனுக்கு சூத்திரம் உண்டு, அதன் படியே உங்களைச் சீர்செய்யுங்கள். சீர் செய்யும் சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இவை சூத்திரமாகவே உள்ளது, இவைகள் குருவின் மூலமாகவே தெரிந்து கொள்ளப்படல் வேண்டும். இதன் அடிப்படையிலேயே சிவனை அடையலாம். சிவனாகவும் மாறலாம்.


சிவ மந்திரம்


சிவ மந்திரங்கள் ஐந்து ஆகும். நமசிவாய இதுவே சிவ மஹாமந்திரம் ஆகும். சிவ தந்திரங்களும் உண்டு. இம்மந்திரங்களில் சொல் ஒன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சொல் செயல் இரண்டும் ஒன்றாகும்போது பலன் தன்னாலேயே தேடி வருகிறது. சிவ மந்திரம் 25-ம் மஹா மந்திரம் ஆகும். இதில் யோகம் போகம் இரண்டும் உண்டு. முக்கியமாக இறைவனை அடைய மட்டுமே இம்மந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.
போகத்திற்கு என்று தனிமந்திரம் உண்டு. அவை இகம்பரத்திற்கு உதவும். சுகம்பரமாக தெரியும், வாழ்வு மாயையே என்று அறியுங்கள். சிவனைச் சார்ந்த அனைத்து மந்திரமும் சிவ வலிமையுடையது. இதற்குமேல் கூற வார்த்தைகளே இல்லை. சாட்சாத் சிவநாமம் சிவமே என்பது தான் உண்மை. அதாவது இதுவே மெய்யினும் மெய்.


சுத்த சிவம்


சுத்தசிவம் பொருள் அறிய வேண்டும். சுத்தசிவம் என்பது மாயை அற்றது ஆகும். சிவ மந்திரத்தில் மாயை இல்லை. இறைவனுக்காகவும் இறைவனைக் காணவும் பயன்படுத்தினால்,- அது மாயை அற்றதாகவே இருக்கும். இறைவன் படைத்த பொருளுக்காக பயன்படுத்தும் போது நாமும் மாயையில் சிக்குகிறோம். இறைவனுக்கான ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினால் அதில் மாயை இருக்காது. இது சத்தியமாகும். நாம் உண்மையாக இருப்பின் ஐந்து எழுத்தும் நம்மை காக்கும் என்பது ஐயம் இல்லை.


மெய் மறப்பு


தியானம் என்பது ஒரு நிலையாகும். அதில் நீதி நியமங்கள் உண்டு. அது உடல், மனம், புத்தி ஆகிய மூன்றையும் நிறுத்துவதே ஆகும். இதில் ஜெபத்துடனேயே தியானம் தொடங்குகிறது. மாதா, பிதா, குரு, தெய்வங்களுடனும் குரு வணக்கத்துடனும் இறைவனின் திருநாமம் ஜெபமாக உச்சரிக்கப்பட்டு தியானம் ஆம்பிக்கப்பட வேண்டும். உச்சரிக்கும் இடம் மனமாக இருக்கும். உச்சரிக்கும் போது நீங்கள் உணர்ந்து உணர்ந்து செய்வீர்கள் சொல்வது நீங்கள் என்று அறியுங்கள். கேட்பது உங்கள் ஆன்மா என்று அறியுங்கள். இந்நிலையில் மனம் மந்திரம் அற்று நின்று விடும். விழிப்பு நிலை மட்டுமே மிஞ்சும். இந்நிலையில் பிரகாசமான பேர் ஆனந்தம் நம்மை ஆட்கொள்ளும். இந்நிலையில் மூன்று வகையுண்டுமுதல் நிலை ஜுவ பிரகாசம் - இந்நிலையில் மெய் மறப்பு என்னும் நிலைவரும். இந் நிலையில் தான் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு விழிப்பான நிலையில் தான் ஜுவன் பிரகாசமான பேர் ஆனந்தத்தை உணர முடியும். இந்நிலை வரும் முன் உங்களை மறந்து ஆழ்ந்த உறக்கமோ உங்களை அறியாத மறப்போ கூடாது, விழிப்பு நிலையே தேவை. இந்நிலையில் மட்டுமே ஜீவன் பிரகாசம் என்னும் ஆன்ம பேர் ஒளியின் தன்மை உணர்ந்து பேர் ஆனந்ததை அனுபவிக்கும். இதை அனுபவிக்க நீங்கள் விழிப்பு நிலையிலேயே இருக்க வேண்டும. அவ்வாறு இல்லையென்றால் அது மெய் மறப்பாகும். மெய் உணர்வை உங்களால் முழுமையாக உணர்ந்து அதிலேயே இருக்க முடியவில்லை யென்றால்இ அது மெய் மறப்பு நிலையாகும். இது யோகமோ தபமாகவோ இருக்காது.


திருவண்ணாமலை


வேளாள மகாராஜன் சரித்திரம்


சிவபக்தனும் அரசனும் ஆன வேளாள மகாராஜன் திருவண்ணாமலையை செங்கோல் செலுத்தி ஆட்சிசெய்துவந்தான். வேளாள மஹாராஜனுக்கு எல்லா செல்வங்களும் இருந்ததுஇ ஆனால் புத்திரபாக்கியம் இல்லை.
புத்திரபாக்கியத்துக்காக மந்திரி பிரதானியிடம் ராஜகுரு யோகிகளிடம் ஆலோசனை செய்தார். யாரும் கண்டிராத அளவில் தர்மத்தை தொடர்ந்து செய்வதுதான் சிறப்பு என்றனர். அப்போது ராஜகுருவின் ஆலோசனையில் சிவனடியார்கள் 108 பேருக்கு தர்மம் செய்தால்இ தங்களுக்கு புத்திரபாக்கியம் பெறுவீர்கள் என்றhர்கள். சிவனடியார்களுக்கு தர்மம் செய்யச்செய்ய அது எம்பெருமான் கைலை நாதனைச் சென்றடைந்தது. இறைவன் தர்ம பலனை ஏற்றுஇ அருள் புரிய திருவுளம் பூண்டார.
கயிலை சிவபெருமான் நந்தி. பூதகணங்கள் எல்லோரும் திருவண்ணாமலைக்கு வந்தனர். வழிபோக்கர்கள் வேடம் பூண்டு தாசிகள் வாழும் வீதியில் சென்றுஇ அந்த இரவு முடியும் வரை அவரவர் கைபிடித்த மாதர்களை மயங்க செய்தனர். தாசிகள் வீடு காலி இல்லாமல் செய்துவிட்டனர். சிவபெருமான் துறவி உருவம் தரித்தார் வேளாள மகாராஜன் அரண்மனைக்கு சென்றார். மன்னர் முன் பசிஇபசிஇபசி என்று பசியால் துன்பப்படுபவர் போல் நடித்தார். வேளாள மகாராஜன் 108 பேர்க்குரிய சேவை செய்ய அனுமதி தாருங்கள் என்றார். என்னை புரிந்து கொள்வார் யாரும் இல்லை. ஐயோ பசிஇபசிஇபசி என்றார். ராஜனோ சுவாமி தங்கள் பசியை யானே போக்கி என் தர்மத்தை பூர்த்தி செய்ய வேண்டுகிறேன் என்றார். என் பசி யாது என்றாலும் உன்னால் பூர்த்தி செய்ய இயலாது என்றார். தங்கள் சித்தம் என்னால் உங்கள் பசியை போக்க எனக்கு அருள் தாருங்கள் என்றார். மன்னா எனக்கு காமப்பசி அதை உடனே பூர்த்தி செய் என்றார். உடனே மன்னன் தாசியை அழைத்து வர உத்தரவிட்டான். தாசி யாரும் கிடைக்வில்லை. தாசிகள் வீட்டு வாசல்கள் தோறும் செருப்பு இருந்தது. கதவு தாழ் இடப்பட்டு இருந்தது. எல்லா வீடும் முழுமையாக இருந்தது என்றார்கள். தாசியரோ பொருள் பெற்று விட்டதால் ஒருவரும் வர முடியாத நிலை என்பதை மன்னன் அறிந்தான்.
வேளாள மகாராஜன் ஈஸ்வரா இது வரை கடைபிடித்து வந்த சிவ சேவைக்கு பங்கம் வந்து விடும் என எண்ணிய மன்னன்- இல்லை என்று கூற என்னால் இயலாது. தானத்தின் புகழுக்கே இழுக்கு வந்து விடுமேh! என்று மனம் வருந்தினான். மன்னன் செய்வது ஒன்றும் அறியாது தினறினான். அரசி செல்லம்மா தேவி அரசனிடம் கவலையை அறிய வினாவினாள். மன்னன் நடந்ததை எடுத்துரைத்தான்.
உடனே கற்ப்புக்கரசி செல்லம்மா தேவி அரசனை நோக்கி தங்கள் புகழுக்கோ தானத்துக்கோ இழுக்கு வராதுஇ யான் சிவனடியாரின் அளவிலா ஆசையை தீர்த்து வைக்கிறேன் என்றார் ராணி செல்லம்மாள்.
அரசனும் மனமகிழ்ந்தான்இ கணவனின் குறிப்பறிந்து நடப்பவரே கற்புக்கரசி என்று கூறிஇ சிவனடியாரின் அறையை நோக்கி செல்லமா தேவி சென்றாள். சிவன்னடியாரோ ராஜ மாளிகை காவலர்களை விலகச் சொல். அவர்களால் எனக்கு ஆபத்து வந்து விடப் போகிறது என்றார். காவலர்களை விலகச் செய்து தானே அலங்கரிக்கப்பட்ட மஞ்சத்து அறையை காவல் செய்தார் ராஜா.
சிவனடியாரோ மஞ்சத்தில் பசிஇ பசி என்று துவண்டவர்இ சிறிது நேரத்தில் தூங்குபவர் போல் ஆனார். செல்லம்மாதேவிக்கு ஒன்றும் புரிய வில்லை. தம் கணவனுக்கு கொடுத்த வாக்கும் யோகிக்கும் கொடுத்த வாக்கும் பொய்த்து விடுமோ என்று பயந்தாள். துறவி வடிவான சிவனடியாரோ யோக நித்திரைக்கு சென்று விட்டாரே. எழுப்புவது கடினம் ஆகக் கூடாது என்று நினைத்தாள். சிவனடியாரே தான் தூங்குவது போல் பாவனை செய்து கொண்டுஇ தன் ஞான திருஸ்டியால் நடப்பதைக் கண்டு கொண்டு இருந்தார். செல்லம்மாதேவி இனி தாமதித்தால் யோக நித்திரை செய்பவரை எழுப்புவது கடினம்இ பாவமும் கூட உடனே அவரை விழிப்படைய முடிவு செய்தாள். படுத்து இருக்கும் துறவியையும் இருகரம் கொண்டு வாரி அணைக்க துணிந்தாள்.
செல்லமா தேவியின் கரம் பட்டதும் சிவயோகி உருவில் இருந்த சிவபெருமான் இளங்குழந்தையாகினார். செங்குமுதம் இதழ் திறந்து அழத்தெடங்கினார்இ பிஞ்சு கால்களால் உதைத்து அழுதார். திருகைலாயபதி குழந்தை வடிவமாய் அலறியதை கண்ட மன்னன் அதிசயத்தில் தன் ஊரே கேட்கும் படியாக குழந்தையின் அழுகை பரவியது. இதைக் கண்ட மன்னன் இது குழந்தை அல்ல ஆண்டவனே என ஓடோடி வந்தான். தேவி இக் குழந்தை அருணசலேஸ்வரரே குழந்தை இல்லாத நமக்கு குழந்தையாக வந்து திருவிளையாடல் புரிந்தார என்றான். குழந்தையின் குரல் ஊர் எங்கும் பேர் ஆனந்தத்தை ஊட்டியது. ஊர் கூடி அரண்மனையின் முன் குழந்தையின் அழகுக்கு ஒப்பவல்ல வல்லமை யாரும் இல்லை. உலகத்தை படைத்த பரம் பொருளே குழந்தை பாக்கியத்தை பூர்த்தி செய்ய வந்தவரே! இகருனை வடிவான வரே!இ அன்பு அபயமானவரே! இ பரிசுத்த மானவரே!இ திரிநேத்திர முள்ளவரே! இமெய் பொருளே எமக்கு அருள் தரவே இப்படி வந்தனையோ என்று அழுது வேண்டி துதிக்கையில். கையில் குழந்தையாய் இருந்த இறைவன்இ வானில் ரிஷப வாகனத்தில் பார்வதி சமேதரராயும் சிவ கணங்களோடும் காட்சி தந்தார். குழந்தை தன்னை விட்டு பிரிந்தது மன்னன்இ தேவி ராணி அழுதனர். உடனே இறைவன் யான் உங்களுக்கு பிள்ளையாய் தோன்றியபடியால் உன் அந்தியக்காலத்தில் உன்னை ஆட்கொண்டு உன் அந்திமக்கால வேதச்சடங்கு விதியை விதிமுறை தவறாது செய்து வருவேன் என்று ஆசி வழங்கினார். இவ்வாறு இறைவன் நடத்திய திருவிளையாட்டின் விளைவே திருவண்ணாமலையில்இ இன்றும் பள்ளி கொண்டான் பட்டியில் வேளாள மகா ராஜனுடைய ஈமக்கிரியைஇ வருடம் தோறும் நடை பெறுகிறது. அதுவும் அருணாசல ஈஸ்வரரே செய்து வருகிறார்.
இவ்வாறு ஈசனே குழந்தையாக அவதரித்த ஸ்தலம் அருணாச்சலம். வேளாள மகாராஜனுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். ஆனால் இன்றுவரை வேளாள மகாராஜவுக்கு அந்திம கிரியை இறைவனே முன் நின்று நடத்திவருகிறார்.


                   :  

ஓம் சிவ புவன சாந்தி
ஓம் சகல ஜீவ சாந்தி
ஓம் என மன சாந்தி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி
(உரிமம் தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை) 
மேலும் படிக்க
நிகழ்வுகள்
தியானேஸ்வர் நித்திய காரி    பூஜை விவரம்.

திங்கள் -         திரு. K. ராஜா அவர்கள்
செவ்வாய் -    திரு. C. ரமேஷ் (C.C. பில்டர்) அவர்கள்
 

ஞாயிறு -        திரு. குமரேசன் அவர்கள்
                          திரு. P. ராஜேந்திரன்
(Heigh way )  அவர்கள்
கோவில்   பராமிப்பு   மேற்பார்வை
திருமதி சாந்தி - கஜேந்திரன்.கைலாய வாத்திய குழு நடத்துனர் : சிவதாஸ் அவர்கள்
(செல் ; 9444813781) 
 : சுனிதா - பாபு அவர்கள்
( செல் : 0942541759)
உழவாரப் பணிக்குழு நடத்துனர் : திருமதி . சுனிதா - பாபு அவர்கள்
(செல் : 0942541759)
Designed & Maintained by : Thiyaneswar Peedam Charitable Trust  by Dzine Corner Mr. Janardan
 
15-05-2014 தருவிப்பு

தியானம் - சிவயோக விளக்கம் (காயத்திரி மந்திரம் பெயர்விளக்கம்)
சூரிய நமஸ்கார விளக்கம் இரகசியம் மெய்தியானம் சிவதியானம் சிவனிலை மெய் பொருளைக் காணுதல் சிவ சூத்திரம் சிவ மந்திரம் சுத்த சிவம்- மெய் மறப்பு திருவண்ணாமலை-வெள்ளாள மகாராஜா வரலாறு.


go back to the top