Arunachaleshwarar
மனிதனின்மாயை அறுக்கும்மலை

மனிதனின்மாயை அறுக்கும்மலை

'உலகில்அதிசயதென்கைலாயசஞ்சீவிதிரிசூலபருவதமலை''


கடந்த காலத்தில் எமதுசத்குரு அம்மா அவர்களால் மெளனயோகியின்
ஆறுநாட்கள்ஞான ஒளிகாட்டியதன் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்டது

மனிதனின் மாயை அறுக்கும் மலை
தென் கையிலை மலை
தென்னாட்டு அமர்ந்த மலை
மெளன யோகியின் ஞானமலை
சிவாய என்றுரைத்து திருநீறு அணிய
அபாயம் எமக்கு இல்லை என்றமலை
உபயமாகும் உமாபதியாக அமர்ந்தமலை
கயிலையினுக்கும் மேலானமலை
பார்வதி இறைவனை அடைய தவம் செய்தமலை
ஆஞ்சனேயரின் கையில் இருந்து எழுந்தோங்கிய மலை
போக முனிவர் சித்தி பெற்ற மலை
சிவபாதம் கொண்ட மலை
சிவதவமாக ஏற்பவருக்கு சிவமாகும் மலை
சிவன் ரூபமாக காட்சி தரும் மலை
பர்வத வர தனியாகி நிற்கின்ற மலை
சித்தர் கோடி சித்தி பெற்ற மலை
ஸ்ரீ சக்கரம் மேடு கொண்ட மலை
நந்தி உரு கொண்ட மலை
சிங்க ரூபம் காட்சி தந்தமலை
கர்ப் விருட்ஷகம் கொண்ட மலை
காணக் கரிய மூலிகை கொண்ட மலை
தெய்வ ரகசியத்தை கொண்ட மலை
காந்தமன கற்பாறை மலை
பார்தாலே பாவம் போக்கும் மலை
பாரினிலே தனித்த மலை
தனித்தவருக்கு மகத்துவமான மலை
கண்டவர்க்கு மன மருந்தாகும் மலை
மாயை பல புரியும் மலை
நாக மலை சர்பங்கள் வாழும் மலை
கானகத்து குருவிகள் பாடல்கள் கேட்கும் மலை
மூர்க்கனும் மூச்சாகி மலை பார்து நின்ற மலை
தபயோகத்திற்கு சிறந்த மலை
கர்ம பலன் ஒளித்தவரை அழைக்கும் மலை
காசு இல்லாதவர்க்கு கருணை பொழியும் மலை
இறையருள் கொண்டவருக்கு செல்வ மலை
மலையை நாடியவர்க்கு மங்களம் தரும் மலை
மர்ம்மகத்து வித்தை தன்னுள் அடங்கிய மலை
மன சுத்தமானவர்க்கு மகேச மலை
மனதுக்கு மருந்தான மலை
வீடு பேறு மோட்ஷம் அளிக்கும் மலை
நமசிவய என்னும் நாமம் ஒலிக்கும் மலை
கற்பக காலத்தின் இருதய மலை
வேதத்தின் பொருள் உணர்த்தும் மலை
தீர்த்த காணிக்கையாக கொண்ட மலை
முக்கோடி முனிவர்கள் மூல கருத்தான மலை
அகத்தின் ஆணவம் அழித்த மலை
திரி சூலம் கொண்ட நாதன் மலை
நந்தி தேவரும் ரகசியமாய் அமர்ந்து இருக்கும் மலை
முக்திக்கு வித்தாகி நின்ற மலை
வித்தகத்தின் விதையாக்கி கருவை தந்த மலை
பிரம்மாண்டமாய் இறைவனும் இறைவியும் மலையாய் நின்ற மலை
இறைவனின் திருப்பாதம் கொண்ட மலை
பெரிய சூலத்தை மணிமுடியாய் கொண்ட மலை
நாக புற்களை தொடராய் கொண்ட மலை
மூலிகை அருவி கொண்ட மலை
சப்த்த கன்னிகள் நடமாடும் மலை
சித்தர்கள் சூட்சுமமாய் திரியும் மலை
யாசித்து நின்றவருக்கு போதிக்கும் மலை
ஞான புதையல் பல தன்னுள் அடங்கியமலை
வான் உலாவி மறை பேச நின்ற மலை
மேகங்கள் வந்து கொஞ்சும் மலை
மழை காற்று நம்மில் தவழும் மலை
மெளன யோகியின் ஆசிரமம் உள்ளமலை
ஆகயாப் பாறைகளை கொண்ட மலை
ஆதவன் இறை வன் மீது உதிக்கும் மலை
ஆண்டவனை அழைத்தாலே எதிர் ஒலிக்கும் மலை
தவம் ஏற்க ஏற்ற மலை
பைரவர்கள் வந்து வழிகாட்டிய மலை
அடைபோல் வெள்ளம் கொட்டும் மலை
பாறையும் லிங்கமாய் காட்சி தரும் மலை
கிரிவலப் பாதையில் பல லிங்கம் கொண்ட மலை
சிவனுக்கு என்று சிகராமாய் மலை
கண்டவர் மீண்டும் காணத் துடிக்கும் மலை
தெய்வங்கள் பல வந்து வணங்கும் மலை
மூலமே மூலமாய் மேல் லிங்கமாய் அமர்ந்த மலை
தெய்வக் காட்சி பல கிடைக்கும் மலை
இறைவனை தேடி திரிபவர்களுக்கு திகட்டாத மலை
தன்னுள் நிற்பவருக்கு தானே மலை
இந்த மலைக்கு ஈடு இணையில்லா மலை
நம் பர்வத மலை
நமசிவய என்னும் நாதன் எழுந்தோங்கிய மலை

- சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி
தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
நிகழ்வுகள்
தியானேஸ்வர் நித்திய காரி    பூஜை விவரம்.

திங்கள் -         திரு. K. ராஜா அவர்கள்
செவ்வாய் -    திரு. C. ரமேஷ் (C.C. பில்டர்) அவர்கள்
 

ஞாயிறு -        திரு. குமரேசன் அவர்கள்
                          திரு. P. ராஜேந்திரன்
(Heigh way )  அவர்கள்
கோவில்   பராமிப்பு   மேற்பார்வை
திருமதி சாந்தி - கஜேந்திரன்.கைலாய வாத்திய குழு நடத்துனர் : சிவதாஸ் அவர்கள்
(செல் ; 9444813781) 
 : சுனிதா - பாபு அவர்கள்
( செல் : 0942541759)
உழவாரப் பணிக்குழு நடத்துனர் : திருமதி . சுனிதா - பாபு அவர்கள்
(செல் : 0942541759)
Designed & Maintained by : Thiyaneswar Peedam Charitable Trust  by Dzine Corner Mr. Janardan
 

go back to the top