Arunachaleshwarar
தியானம்

ஓம் பரி பூரணத்துவ மாதா
ஓம் பரி பூரணத்துவ பிதா
ஓம் பரி பூரணத்துவ குரு
ஓம் பரி பூரணத்துவ தியானேஸ்வர்


முதல் தேடல்


இறைவனை முழுமையாக நீங்கள் அறிய வேண்டும் இறைவனைக் காணும் தகுதி நம்மில் தான் உள்ளது. துரியோதனன் சபையில் கிருஷணர் விஸ்வருபத்தைக் காட்டிய போது எல்லோராலும் இறைவனின் ரூபத்தைக் காண முடியவில்லை. ஒரு சிலர் மட்டும் இறைவனை தரிசனம் செய்தார்கள். ஒரு சிலரது கண்களால் பார்க்க முடியவில்லை. ஒரு சிலர் வாயில்காவலர்கள் மயங்கியே போனார்கள். என்ன நடந்தது? என்று அறிய முடியவில்லை. இதுபோல் நம்முன் வந்தாலும் காணும் தகுதியும் நம்மிடம் தான் உள்ளது. இறைவன் நம் முன்வந்தாலும் இறைவனைக் காணும் பாக்கியத்தை அடையுங்கள். இறைவன் என்றும் நம்முன்னே

                                                                                                                யோகி தியானேஸ்வரரால் அருளப்பட்டது
                                                                                                                யோகி தியானேஸ்வர்
                                                                                                                தியானேஸ்வர் அறக்கட்டளை

மனித குணம்


இறைவனின் குணமும் இறைத் தன்மையும் இறைவனின் செயலையும் அறிய முடியாது. இறைவனை அறிந்தவைகளும் உண்டு அறியாதவர்களும் உண்டு. இறைத்தன்மையை உணர்ந்தவனால் கூட கூறமுடியாது. இறைவனை உணராததால் இறைவன் இல்லை என்று மொழிபவனும் உண்டு. இதில் பஞ்சபூதம் தெய்வங்கள் தேவதைகள் கன்னி தெய்வங்கள் இறந்தவர்களும் தெய்வமாக்கபட்டவர்களும் உண்டு. இதில் எல்லா தெய்வங்களும்அவரவர் ஏற்றுக்கொண்ட மனநிலையின் நம்பிக்கையில் உள்ளது. இதில் எல்லாம் கடந்து மேல் செல்லுவோர் மட்டும் பல இறைரூபத்தில் இறைவனைக்காண முடியும். அன்பான இறைவன் என்னிலும் உன்னிலும் உள்ளான்.



தேவை அறிந்து வருவான்


இறைவனிடம் நெருங்கும் முன் உங்கள் மனதை தூய்மை செய்ய தவறாதீர்கள் மன தூய்மையை ஜெபத்தால் செய்யுங்கள். ஜெபம் நல் ஒழுக்கத்திற்கு வழிவகுக்கும். நல்லொழுக்கம்இ நற்பண்பை வளர்க்கும்.
நற்பண்பினால் மட்டும் இறைவனிடம் நீங்கள் கேட்டதை அடைய முடியும்.நற்பண்புடன் நீதிக்கு புறம்பானதை இறைவனிடம் எதையும் கேட்காதீர்கள் இறைவனிடம் கேட்டது கேட்டபடியே கிடைக்கும். உண்மையான எதையும் இறைவன் தர மறுப்பது இல்லை. ஒருவனுக்கு தேவையானதை தேவையான நேரத்தில் யார் மூலமாவது கொடுத்து விடுவார் அவரே இறைவன்.


கடந்து செல்


இறைவன் அருவமாக உள்ளார்.அது ஊனக் கண்ணால் கான இயலாது. ஆனால் நீ அவனை நினைத்து தியானிக்கும் போது தான் மனக்கண் விழிப்பு நிலையை அடைகிறது. அங்கு பல மாயை பிறக்கும் ஆம் மாயையில் எது உண்மை என்று அறிய நீ விழிப்பாக இருந்து- அதையும் கடந்து சென்று கொண்டே இரு- அதுவே நித்தியத்திற்கு வழிதிறக்கும்.



இறைவனை அறியும் வழி


இறைவன் அருவப் பொருளாக மகh இரகசியமாக பிரபஞ்சத்தில் பதிமானமாக உள்ளான்.
அவனைக் காணவும்இ உணரவும் செய்யும் கருவியாக நீயே உள்ளாய். நீயே உன்னை திரித்து உடல்இமனம்இபுத்தி ஒன்று குவித்துஇ- அவனைக்காண மனம் தெளிய தெளிய- இறைவன் தெரிவான் .



அன்பாகு


இறைவனை வணங்கும்- இல்லற வாசிகளாக இருந்தால் நீங்கள் அமைதியும் கருணையும் அன்பான தெய்வ சொரூபத்தை தேர்வு செய்து வணங்குங்கள். கோபமான தெய்வம் எல்லாம் பரிகார தெய்வமாக கோவில் வைத்து வழிபட வேண்டியது. நீங்கள் சாந்த குணம் உடையவராகவும்இ கருணையும் இருக்க அன்பே வடிவமானவரான இறைவனை நீங்கள் வணங்குங்கள். அப்போது தான் தெய்வீக குணத்தை பெறுவீர்கள். அன்பே வடிவம்இ அன்பேகுணம்இ அன்பான செயல் உள்ள தெய்வீக உருவத்தை வழிபட்டுஇ அன்பான சிவமாக மாறுங்கள் எதை நீங்கள் நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுவீர்கள். அன்பையே நினை மனமே அன்பாகும். பின் அன்பே சிவமாகும்.


தேடல்


ஒவ்வொருவரும் மனிதனாக இருக்கும் பொழுது உடலையும் உயிரையும் காக்க இறைவனை தேடுகிறோம். உலகப்பொருள் எதுவும் உயிர்காக்க உதவாது என்பதை அறிந்தே உயிர்காக்க வல்லவராம் இறைவனை தேடுகிறோம். உயிரைக் காக்க பொன்னும் பொருளும் உதவாது அவன் நாமம் மட்டுமே நம்மை காக்கும் என்பதை உணருவோம்.


இறைவனை தேடு


நhம் உடலோடு இருக்கும் போது இறைவனை தேடி அடையும் வழியை அறிய வேண்டும்.
அப்போது தான் உயிர் உடலை விடும் போது இறைவனை அடைய முடியும்.
இறைவனை உடலில் இருந்தே கலப்பவர் சிலரே. அவர்களே தப சீலர்கள் கலந்தே இருப்பவர்கள் சித்தர்கள்.



தெய்வீக அனுபவம்


ஒவொருவரிடமும் தெய்வீகம் உள்ளது. அவர் அவர்கள் தேடல்களுக்கும் ஏற்றவாறு தெய்வீகம் தென்படுவது உண்டு. அவர் அவர்கள் தங்களுக்குள் தெய்வீகம் இருப்பதை உணரும் போது தான் நாம் தெய்வீகத்தை அறிய முடியும்.
தெய்வீகம் நம் இன்ப துன்பங்களில் பங்கு போடும். இதை உணர்ந்தால் இன்பம்இ துன்பம் பக்தியில் இருப்பவர்கள் பாதியே அனுபவிக்கிறார்கள்இ மீதியே இறையுணர்வு அனுபவிக்கும். ஆனால் யோகிகளுக்கு அவர்கள் இறைவனாகும் போது இன்பமும்இ துன்பமும் இல்லாதே போகிறது. இறைவனை தொழும் போது துன்பம் போகும்.
இறைவனை விட்டு விலகும் போது விதியின் பிடியல் துன்பப்படுபவhர்கள். ஒரு சிலருக்கு விதி விளையாடும் போது இறைவனை நெருங்க முயற்சிப்பதும் இல்லை. இறைவனோடு இருப்பவர்களுக்கு துன்பம்இதுயரம் தூரமாகவே தெரியும். இறைவனே இவர்கள் அருகில் இருப்பார்கள் .இன்பமாக இருக்கும் போது இறைவனை மறவhது. துன்பம் வந்ததும் துவளாதே துன்பம் நிரந்தரம் இல்லை. துன்பம் போனதும் இன்பமே வரும் துன்பத்தில் இறைவனை பிடித்துக் கொள். இன்பம்இ துன்பம் மாறி மாறி வருவது தான் மனித வாழ்க்கை. இன்பத்திலும் இறைவனோடு இருஇ துன்பத்தில் துணையாக இறைவனே வருவார்


இறைவன் நாமம் சொல்


இன்பத்தின் அருமை- துன்பத்தில் இருந்து மீள வேண்டுமாயின்- துயரத்தை நினைப்பதை விடு. எல்லாம் இறைவன் செயல் என்று- துயரத்தை தூக்கி எறிந்து விட்டு- இறை நாமத்தோடு இரு. இறைவன் உன் அருகிலும் உன்னுள்ளுமாக இருப்பார். நீ துன்பமே இல்லாது இருக்க- இறை நாமத்தை சொல்லி- அதை நீயே கேட்டுக் கொண்டு இரு. உன் கவனம் இறைவன் பக்கம் திரும்பினால் கவலை ஒடி விடும்.இறைவன் நாமம் சொல்ல சொல்ல துன்பம் பறந்தோடும்.



இறைவனுக்கே உணவளிப்பதுபோல்


இறைவனே உனது ஒவ்வொரு வேலையையும் செய்வதாக நினைத்து செய். உலகில் பழுதும் இல்லை. பாவமும் இல்லாது போகும். இறைவன் நமக்கு ஒருபோதும் கெடுதல் நினைப்பதோஇ செய்வதோ இல்லை. இறைவன் உன்னோடு இருந்தால் யாரும் துன்ப்படுவது இல்லை இறைவன் எல்லோரையும் பாதுகாக்கவும்இ உணவு அளிக்கவும் விரும்புவது போல்இ நீயும் விரும்பு.



இறைதன்மை


உலகில் ஒவ்வொன்றும் புதியதாய் பிறக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி முதிர்ச்சி என்ற பெயரில் மரணத்தை நோக்கியே nசல்கிறது. ஒவ்வொரு நாளும் தன் ஆயுள் நாள் முடிவடைவதை நாம் உணர்வது இல்லை.வரும் நாட்களில் நாம் நமக்கும் பிறருக்கும் இன்பமானதாக ஆக்கி வாழ வேண்டும்.
ஒவ்வொரு வரும் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். இதுவே இறைத் தன்மையாகும். இறை வாழ்க்கைக்கும் வழிகாட்டும்.


கர்மம் கழிக்க


இறைவனிடம் ஒவ்வொரு நாளும் வேண்டும் போது இது கர்மம் போக்க வந்த உடல் கர்மத்தை நாம் கழிக்க வேண்டும். இறைவன் ஒவ்வொரு நாளும் என் கூடவே இருந்துஇ என் கர்மத்தை கழிக்க உதவேண்டும். கர்மத்தின் துன்பம் தாங்கும் பலத்தை தந்தும்இ காத்தும்இ அழைத்தும்இ வழிநடத்த வேண்டும். ஒவ்வொருவரும் வேண்டுகோள் வைத்தே பூஜை செய்கின்றனர். இது இந்த இகம்பர வாழ்க்கைக்கு தான் உதவும். பிரதி பலன் இல்லாத சேவைஇ பக்திஇ தபம் இவை மட்டும்- இறைவனை அடைய உதுவும்.


இறைவனுக்கும் நமக்கும் உள்ளதூரம்


ஒவ்வெhருவரும் பக்தி செய்கிறார்கள். பின் ஏன்? பலன் முழுமையாக இல்லை? என்பார்கள் சிலர். இவர்கள் பக்தியின் சிரத்தையும் நம்பிக்கையையும் விட முயற்சியும் பரவைரhக்கியமும் தான் எடைபோடப்பட்டுஇ நமக்கு பலனாக வந்து நமக்காக வேண்டுவதை விடஇ பிறருக்காக வேண்டுவதே மேலானது. மேலும் நமக்கு பலன் பன்மடங்காக கிடைக்கும். நமக்கும் இறைவனுக்கும் உள்ள தூரம் குறையும்.


கர்மம் குறைய


இறைவனிலும் இறைவன் ஒருவரே இறைவன். ஒருவனையே இறுக்கமாக பிடி. மனிதர்கள் மனிதர்களை மாற்றுவது போல்இ இறைவனை மாற்றதே. எந்த மதத்தவரும் தம்மதத்தில் இருந்து பிறமதம் மாறுவதே தவறு. இறைவன்- தான் கேட்டது எல்லாம் தரவில்லை- என்று நினைக்கிறான். இறைவனிடம் தாம் எதிர் பார்த்த பலன் தரவில்லை- என்று இறைவனையே மாற்றுகிறான். உன் தாய் தந்தையை மாற்ற முடியுமா முடியாது. நீ எந்த மதத்திற்கு மாறினாலும்- உன் மரணமும்இ கர்மத்தையும் மாற்ற முடியாது. நீ இறைவனையும் (மதம்) மாற்றாது இறுக்கமாக பிடித்திரு. உன் மரணம் தள்ளிப் போகும்இ உன் கர்மமும் குறையும்.


சேவை


இறைவனிடம் உன் சேவையை விடாமல் செய். இறைவனுக்கு செய்யும் போது இறைவனே உன் வேலையை செய்வதாக செய். இறைவன் பழுதே இல்லாது உன் வேலையைச் செய்வார். உன் சேவை இறைவனுக்கானது என்று செய்யும் போது- அதில் தடங்கல் வருத்தம் என்பதே இல்லை. என்றும் எதிலும் மகிழ்ச்சியே உண்மையான- சேவைக்கு இறைவனிடத்திலும் உலகிலும் மெய்ப் பலன் உண்டு.


இறைவனை குறை கூறாதே


இறைவன் நீ கேட்காமலேயே உனக்கு வாழ்வில் நலன்களை வாரி வழங்கி உள்ளார். அதை மறந்து பிறரிடம் தன்னை ஒப்பிட்டு- இறைவனையே குறைகூறி திரியாதே. ஒவ்வொருவர் பிரார்த்தனைக்கும்இ ஏற்ற பலனையே நாம் அடைகின்றோம். நாம் செய்கின்ற தானமும்இதர்மமும் நம்மை காக்கும். மன தூய்மையின் செயல்களுக்கு ஏற்றவாறு வாழ்க்கையின் நலம் அமைகின்றது. ஒவ்வொருவரின் குணத்தாலயேஇ வாழ்க்கையில் ஏற்ற தாழ்வு அமைகின்றது. அதற்கு ஏற்ற பலனே கிடக்கின்றது. இறைவன் மீது பழி போடாதே.


இறைவன் உன்னோடு


இறைவனிடத்தில் எப்போதும் தொடர்புடன் இருக்க வேண்டுமானால் இறை நாமத்துடன் இரு. இறை நாமம் உன் பேச்சாகவும்இ மூச்சாகவும் இருக்கும் வரைஇ இறைவன் உன்னுடனேயே இருப்பான். இறைவன் நாமத்தை தொட தொட அது உன்னை தொட்டுஇ இறை தொடர்பு கிடைக்க செய்யும். எப்போதும் இறை சிந்தனையோடு இரு. அப்போது தான் நீ இறை தொடர்புடனே இருப்பாய். இறை நாமத்தை ரசித்து ருசித்து தான் பாரு இறை பசிக்கு அதுவே அரும் மருந்து.


பேதம்


இறைவனுக்கு தொண்டு செய்கின்றhயா? நீ இறைவனுக்கு செய்யும் சேவையில் கணக்கு பார்க்காதேஇ எந்த தொண்டாக இருந்தாலும் சரி பணமாக இருந்தாலும் சரி- அது உடல் உழைப்பிலே உருவானதாக இருக்க வேண்டும். இறைவனுக்கு சேவை செய்யும் போதும் பேதம் பார்க்காதே. உன் குழந்தைக்கு செய்யும் செலவில் ஒருபோதும் கணக்கு பார்ப்பது இல்லையே. இது போல் உன் மனம் மாறாது இறைவனிடம் தொண்டு செய்.


இறப்புக்கு பின்


பக்தியை எல்லாவற்றிலும் வைத்திரு இறைவனிடத்தில் பயபக்தியோடு இருக்கட்டும். தெய்வீகம் எப்போதும் உன்னோடு இருந்து- பல ஜென்மங்களுக்கு வழிகாட்டும்- இறைவன் அருளும் ஆசியும் மட்டுமேஇ ஒருவனது உண்மையான மெய் காப்பாளனாக உன்னை காக்கும். தெய்வீகம் என்றும் அழியாதது. அதுவே உன் இறப்புக்கு பின் உன் கூடவே வரும்.


இறைவனை பிடிக்க நற்குணமே போதும்


இறைவனிடத்தில் நீ நெருக்கமாக இருக்க வேண்டுமா? உன் குணத்தை செம்மை செய். இறைவன் மனதில் பூ போல மலருவான்- அன்று முதல் உன் மனம் தெய்வீகம் கமழும். நற்குணம் தான் இறைவனின் பீடமாகும். நற்குண வாளனையே இறைவன் தேடிக் கொண்டிருக்கிறார் என்றென்றும்.



தெயவீக குணம்


இறைவன் ஒவ்வொருவரது சொல்லிலும் செயலிலும் இருப்பான் ஒருவரது குணத்துக்கு ஏற்றவாறு இறை தன்மையில் தான் மிளிருகிறது. இறைவன் ஒவ் வொருவர் மன குணத்திற்கு ஏற்றவாறு தான் வெளிப்படுவார். மனித குணத்தில் இருந்து தெயவீக குணம் மாறும் போது மனிதன் தெய்வீகம் ஆகி பின் தெய்வமாகின்றான். .இறை குணம் மாறும் போது இனம்இ மதம் பேதம் இருக்காது. மனிதன்,மிருகம் பேதம் கூட இருக்காது. உலக விஷயங்கள் நல்லவை கெட்டவை என்ற பேதம் இருக்காது.


அன்பு மாறாது இரு


இறைவனை தெய்வமாக, குழந்தையாக, தந்தையாக, தாயாக, நண்பனாக பாவிக்கிறார்கள். எவ்வாறு உங்கள் பாவம் இருந்தாலும் அல்லது மாறினாலும், உங்கள் அன்பு மாறாததாக இருக்க வேண்டும். தூய அன்பில் பங்கு போட விடும்புவது இல்லை. அது பக்தனின் பந்த பாசத்தை இறைவன் விரும்புவது இல்லை. பக்தனின் உண்மையான ஒருமித்த அன்பையே இறைவன் எதிர் பார்ப்பதால் எல்லா உறவையும் துறந்து இறைவனை பற்றுகிறார்கள் இதுவே உண்மையான துறவு.


மனம் லயம் ஆக


இறைவனிடம் மனம் லயப்பட வேண்டுமானால் நமசிவாய நாமத்தை எழுதுங்கள். உங்கள் மன லயத்துடன் 108 முறை எழுதுங்கள். மனம் வெளியில் சென்றால் உடனேயே நிறுத்திவிடுகள். நீங்கள் இறை நாமம் எழுதும் போது சொல்லி கொண்டும்இ நமக்குள் நாமே கேட்டுக்கொண்டே எழுத வேண்டும். உங்கள் நேரத்தை பொறுத்து 100 முதல் 21600 வரை ஜெபம் செய்து. மனதை தூய்மை செய்யுங்கள் மனம் சுத்தமடையவே நாம ஜெபம் செய்கிறோம். மனம் சுத்தம் அடைந்து விட்டால் சந்தனம் போல் மணம் வீசும். அதனால் தொடர்ந்து இறை நாம ஜெபம் செய்யுங்கள்.


இறைவன் இருக்க


இறைவன் எல்லோரிடத்திலும் இருக்கிறார் என்று பணிந்து நட. மனிதரில் மனிதனாக இருப்பவர்கள் மனிதனுக்கு உதவி செய்வார்கள். தெய்வகுணம் வரும் போது மிருகங்களுக்கு உதவி செய்வார்கள். தெய்வகுணம் உள்ளவர்களுக்கு- மனிதன், மிருகம் பேதம் இல்லாது இருக்கும். மனிதனின் கருணைவடிவான அன்பு தெய்வீக பண்பாக மாறி இறை தத்துவத்தை அடையும்.


உடல் இறை கோயில்


இறைவன் என்னிலும் உன்னிலும் கோயில் கொண்டு உள்ளார். அவர் என்னில் இருந்து வெளிப்படும் போது- ரதம்போல் வலம் வருவதை உணர்ந்தேன். இறைவன் வாழும் என் உடலாகிய கோயிலை நித்தமும் பூஜை செய்கிறேன். இறைவனை புத்தியில் உள்ள சித்தத்தில் சித்திக்க செய்தேன். சித்தன் சித்ததில் குடி கொண்டு உடலில் நிறைந்தார். உன்னையும் மனதையும் ஜெபத்தால் தூய்மை செய். எண்ணம் தூய்மை ஆக எழுந்தருள்வார்.


இறைவனை அடைய


இறைவனை அடைய உன் சொல்லையும் செயலையும் தூய்மை செய். நீ உண்மையாக இருப்பின் மெய் பொருள் உன்னில் எழுந்தருளும். உண்மையும் மெய் பொருளும் ஒன்றே. நீயே மெய் பொருள். ஆனால் உலகம் உனது ஆகும். உலகமே உனக்கு சொந்தம். ஆனால் உனக்கு தேவைகள் இல்லை. நீயே எல்லாம் ஆக- நீயே அது என்று உணரும் போது- கடவுள் நிலை அடைகிறாய்.


இறைவனை உணர்


இறைவன் தன் குழந்தைகளை எப்போதும் காக்க தவறுவது இல்லை. அவன் கர்மம் தான் நிழல் போல் தொடரும் ஒளி வந்ததும் நிழல் விலகுவது போல்இ இறைவன் வந்ததும் மாயையும் விலகும். இறைவனோடு எப்போதும் உன் மனம் இருக்குமாயின் உனக்கு என்றும் துன்பமே இல்லை. இறைவனே நின்று உன்னை வழி நடத்துவார். ஒவ்வொரு நிமிடமும் இறை நாமத்துடன் இருப்பாயின். இறைவன் ஒவ்வொரு நிமிடமும் உன்னோடு இருப்பதை உணர்வாய்


அடியவர் தொண்டு


இறைவனுக்கு என்று உன் உழைப்பின் ஊதியத்தில் - ஒரு சிறிய பகுதியை சேமித்து, இறை அடியவர்களுக்கு- தொண்டு உள்ளதுடன் உதவி செய் .
நீ கேட்காமல் தன்னை உனக்கு தந்த இறைவனுக்கு நீ என்ன செய்தாய் ? ஏழை எளியவர்களுக்கு உதவி செய் இ அது இறைவனுக்கே செய்யும் தொண்டாகும்.


இறைவனே நண்பன்


இறைவனை விட இனிய நண்பன் உலகில் யாரும் இல்லை. அவனை விட உற்றதுணை வேறு எதுவும் இல்லை. அவனை விட மிஞ்சிய மருத்துவனும், மன மருந்தும் இல்லை. அவன் காதலை விட உயர்ந்த காதலும் இல்லை. இவ்வுலகில் இறைவனைப் போல் அன்பhர்ந்தவன் யாரும் இல்லை. யான் அவனை காதலித்தே அவனில் கலந்தேன் . உனக்காகவே இறைவன் உள்ளான். உன்னைக் காணவே காத்திருகின்றான். உன்னையே அவனுக்கு கொடு முழுமையாக நீயே அவன் .....


உண்மை அறி


இறைவன் ஜீவனில் ஜீவாத்துமா ஆகவும் பரந்த விரிந்த இடத்தில் பரமாத்துமா ஆகவும் உள்ளார். ஜீவன் என்பது சக்தியாகும். உலகில் உள்ள சக்தி எல்லாம் இறைவனிடத்தில் இருந்தே வந்தது. அது மீண்டும் இறைவனை அடையும். இதில் ஓர் உயிராய் பிறந்து ஐந்து அறிவையும் தாண்டி, ஆறு அறிவையும் அடைந்து, ஆறாவது அறிவிலும் நல்லது, கெட்டது பகுத்து அறிந்து இறைவனை அடைவதே பக்தியின் வழியாகும். எல்லா - ஜீவனிலும் சிவமாகுவது - என்பது எல்லா உயிரும் பரமாத்துவமாவாக மாறுவதே ஆகும். மனித உயிர் சக்தி, சிவத்தை அடைவதற்கே உலகிற்கு மனிதன் வருகிறான் என்ற உண்மையை அறி.


மனித ஜென்மம்


இறைவனை அடையவே மனித ஜென்மம் எடுக்க வேண்டும். இறைவனை உணரவே மனித ஜென்மம் உதவும். எத்தனை ஜென்மத்துக்கு பிறகே மனித ஜன்மம் கிடைக்கிறது. அதில் இறைவனை தேடுவது கலியுகத்தில் அரிது. தேடுதலில் நல்ல குரு அமைவது அரிது. நல்ல குரு நமக்கு உபதேசம் கிடைப்பது அரிது. உபதேசத்தை உள்வாங்கி உணர்ந்து அதில் திழைப்பது அரிதிலும் அரிது. அறிந்ததில் இருந்து வாழும் காலத்திலும் ஜீவன்முக்தனக இருப்பது அரிதிலும் அரிதே.
இறைவனை தேடுபவர்கள்- நல்ல குருவை நாடுங்கள். குருவை நாடின் அவர் பார்க்கும் பார்வையின் இலக்கை அடையுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது. குருவை ஆராய்ந்து உங்கள் நேரம்இ குருவின் நேரத்தை வீண் அடிக்காமல் இருங்கள். உங்களை நீங்கள் பண்படுத்தவும், இறைவனை அடைய மட்டும் வழி கேளுங்கள். போக வாழ்க்கைக்காக நாடாதீர்கள். இறைநாட்டம் இல்லாது குருவிடம் செல்லாதீர்கள். போகத்திற்கு என்று செல்வ செளிப்பான குரு உண்டு. அவர்களிடம் கர்ம யோகம் உண்டு.


துன்ப மனம்


இறைவனை தேடுபவனுக்கு கவலை, துன்பம் என்பது இல்லை. ஏனெனில் அவர்கள் மனம் இறைவனுடன் இருக்க நினைக்குமாயின்- அவர் மனம் துன்பத்தை நினைக்காது. சுடும் சட்டியை எவ்வாறு உங்கள் கை வைத்து கொள்ளாதேh அது போல் மனம் மனத் துன்பத்தை வைத்துக் கொள்ளhது. இன்பமான இறை நாமத்தையே நாடும். எப்போதும் நீங்கள் குருவின் பார்வையில் இருங்கள். துன்பம் பாதிக்கவே பாதிக்காது. துன்பம் எல்லாம் இறை இன்பமாக மாறிவிடும். மனம் கர்மத்தில் இருந்து விடுபடும்.

இறை தேடு


இறை நாட்டம் உள்ள சான்றோரை நாடுங்கள். உங்கள் மனம் தீய எண்ணங்களில் சஞ்சரிக்காது. நல்லோருடனே எப்போதும் உங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள். சான்றோர் வார்த்தைகள் குருமார் அமுதமொழி மீண்டும் மீண்டும் நினைத்து பாருங்கள். இறைவன் நாமத்துடன் உங்கள் மானசீக குருவை நினைத்து, அவர்கள் போல் வாழ பழகுங்கள். இவ்வாறு தொடர்ந்து வாழ்வீர்களhனால்- நிஜமான நிஜத்தை அடைவீர்கள- அதுவே சாத்தியமாகும்.
மன சக்தி இறைவனை அடைய வேண்டுமாயின்- மhனசீக தெய்வம் வேண்டும். அது உன் இஷ்டதெய்வம் ஆக இருக்க வேண்டும். பின் அதையே ஜெபம் செய்ய வேண்டும். பல ஆயிரம் ஜெபம் செய் அதில் உன் மனம் இலகுவாக மாறும். பின்னர் உன் உடல் இலகுவாக மாறும். உன் எண்ணம் உயர்ந்து ஓங்கியதாக அமையும். இந் நிலையில் உன் மனம் ஜெபத்தை நிறுத்தாது. வாழ்க்கையில் தொடருமாயின் உன் மனம் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு பிரிந்து உன்னுள் இருக்கும் அமைதியை தேடு. வெளியில் தேடுவது சாந்தி (அமைதி) அல்ல அது உன் உள்ளேயே உள்ளது.


உன்னை வழி நடத்த


இறைவனிடம் முழு சரணத்துவம் அடைந்து விடு. அது உன்னை காக்கும். ஒருமுறை சரணத்துவம் அடைந்து மீண்டும் எதற்காக அடைந்தேன் என நினைக்காதே. இறைவனிடத்தில் விட்டுவிடு. அவரே உன் வினையில் இருந்து உன்னை மீட்டு வழிநடத்துவார். பhஞ்சாலி போல்- "ஹரே முகுந்தா முராரி கிருஷ்ணா கிருபா ஹத்தோ ரச்சா ஹத்தோ"- என்று கையை உயர்த்திய நிமிடம்- உயிரைவிட மானமே மேல் மானத்தை இறைவனே காத்தான். இதுவே முழு சரணாகதியாகும்.


இறை நாமம் துணை


இறைவனை அடைய வேண்டுமானால் இறை நாமத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். அவன் நாமத்தை தவிர உற்ற துணை வேறு இருக்க முடியாது. இறைவன் நாமத்தை உயிர் உருக சொல்லுங்கள். இறைவனிடம் செல்ல ஒவ்வொரு நாமமும் படியாக மாறி விண்ணோக்கி இழுத்துச் செல்லும். இறைவன் நாமம் மட்டுமே இறைவனுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை குறைக்கும். இறைவனோடு கலக்கவும் இறை நாமம் மட்டுமே உதவும். இறைவனை அறிந்து அவனையே பேச்சாகஇ மூச்சாக இருப்பவருக்கு இன்ப துன்பம் இல்லையே- நீயே இறைவன். இறை தடை மனமே
இறைவனை அடைய தடையாக இருப்பது மனமே!இ மனமே சத்துருவாக இருக்கும். மனதில் உள்ள எண்ணங்கள் தான் செயல்களுக்கு காரணம் ஆகிறது. நல்லெண்ணங்கள் உதயமாக அதிகமாக ஜெபம் செய்யுங்கள். ஜெபத்திலும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். இவ்வாறு ஜெபம் செய்ய செய்ய உடல்இ மனம் பரிசுத்த மடைகிறது. நல்லெண்ணங்கள் இறை சிந்தனை செய்ய செய்யும். இறை சிந்தனையில் தான் இறைவன் தோன்றுகிறான். ஜெபத்தால் இறைவனைக் காணுங்கள்.


இறை போதகன்


இறைவனே மட்டும் தேடுபவர்களுக்கு இறைவனே கிடைப்பான். எவ்வாறு புத்தகம் படித்தாலும் நீ ஞானியாக முடியாது- நூலகத்தார். எவ்வளவு பூஜை செய்தாலும் ஞானியாக முடியாது- அர்ச்சகர். எவ்வளவு யாகம் செய்தாலும் ஞானியாக முடியாது- வேதியர். எவ்வளவு சொற் பொழிவு செய்தாலும் ஞானியாக முடியாது- பேச்சாளர். எவ்வளவு யோகம் கற்றாலும் ஞானியாக முடியாது-யோக கலை பயிற்சியாளார். உன் முழு நேரத்தையும் இறைவனுக்காக கொடுத்து அவனை மட்டுமே தியானித்து தவம் பல வருடம் செய்பவன் இறைவனை போதிப்பவன் மஹா ஞானியாவன்.


இறைதேர்வு


இறைவனை தேடுபவர்கள் பல கோடி உள்ளனர். அதில் பக்தியில் உள்ளவர்கள் சில லட்சம் பேர்களே. பயபக்தியுடன் இருப்பவர்கள் சில ஆயிரமே. இறைவனிடம் லயமாக இருப்பவர்கள் சில நுறுபேரே. அவற்றில் இறைவன் ஒருவரையே தேர்வு செய்து அவரை குருவாக நிர்ணயத்துஇ அவரிடத்தில் இறைவன் கோவில் கொண்டு- எழுந்து அருள்கிறார் என்பதே சத்தியம் ஆகும். குருவை இறைவனே தேர்வு செய்வார்.


குணமாற்று

இறைவன் என்பது தெய்வகுணம் உடையது. மனித குணம் வேறு தெய்வ குணம் வேறு. குணத்தால் மட்டுமே இருநிலையாக மாறுகிறது. பேயும் மனிதனும் குணத்தால் மாறுபடுகிறது. மனித குணம் தெய்வ குணம் குணத்தாலேயே மாறுகிறது. மனிதகுணம் தெய்வமாகிறார்கள்- உதாரணம் கண்ணகிஇ திரெளாபதிஇ சீதா போன்றவர்கள். மனித குணத்தோடு இறைவனை நெருங்கினால்- மனிதன் பஸ்பமாகி விடுவான். அதனாலேயே இறைவனே மனித குணத்தோடு உன்னைக்கான வருகிறார்.


பிறப்பு அறுக்க


இறைவன் உனக்காவே எல்லாம் படைத்தார். படைத்தவனை மறந்து நாம் வந்த இடத்தையே சொந்தம் என்று இருந்து விடுகிறோம். போகும் இடம்- இறைவனோடு நாம் இருக்க முடியும். பிறக்காமல் இருக்கவும் வழிதேடும். மறந்தால் வந்த பூமியே பெரிதாக தெரியும். இறைவன் தன் குழந்தை வருகைக்காக ஒவ்வொரு நிமிடமும் காத்துக்கொண்டு இருக்கிறார். அவரே நம்மை படைத்தார்- அவரே நமக்கு தாயும்இ தந்தையும் ஆவார். அவரைக்காண வழி தேடாதுஇ மீண்டும் பூமிக்கு வரவே வழிவகுக்கிறோம்இ பிறப்பை அறுத்தாலே ஜுவ முக்தி.


இறைவனுக்கhக


இறைவன் நமக்காகவே இருக்கிறார்; நம்மை காக்கவே இருக்கிறார்- என்பதை அறி. ஒருவன் எல்லா உணவையும் சமைத்து வைத்தான். யாரும் இல்லாத இடத்தில் என்றால் யாருக்கு பிரோஜனம். யாருக்கும் பயன் இல்லை. இதுபோல் இறைவன் நமக்காகவேஇ பக்தனுக்காகவே இறைவன். இறைவன் இல்லையேல் பக்தன் இல்லைஇ பக்தன் இல்லையேல் இறைவனும் இல்லை. இருவரும் சேர்ந்தது இருந்தால் உலகம்; இருவரும் கலந்து ஒன்றாக இருந்தால் தெய்வம்இ நீ இறைவனுக்காகவே இரு.


நம்பிக்கை


எல்லையில்லா இறைவனை எல்லை இட்டு வணங்குவது கோவில். உருவம் இல்லா இறைவனை உருவம் இட்டு வணங்குவது பூஜை. உருவமே இல்லாது வணங்கினாலும் உருவத்தை வணங்கினாலும் தெய்வம் தெய்வம்தான். அது உன் நம்பிக்கையிலேயே உள்ளது. மண் சாணிஇ மஞ்சள்இ மாவுஇ உணவு எதுவாயினும் பிள்ளையார் பிடித்து தொழுவது பக்தியின் வளமை. எப்பொருள் ஆயினும் அப்பொருளில் இறைவனை காண்பதுதான் நம்பிக்கையின் நம்பிக்கை. பலனையே தெய்வ பலனாக நீ அடைகிறாய்.


மனசாட்சி கூடவே இருக்க


இறைவனை அடைய ஜென்மபலன் வேண்டும். இருப்பினும் குழந்தைகளாக இருக்கும் போதே இறை ஞானத்தை வயதுக்கு தகுந்தவாறு ஊட்ட வேண்டும். இளமை பருவத்தில் நீங்கள் விதைக்கும் விதை பெரிய மரமாகி பழங்களை தரும். இளம் வயதில் இறைவனை அறிந்தவருக்கு எப்போதும் மனசாட்சி கூடவே இருக்கும். எங்கும் எப்போதும்இ எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனம் தவறு புரிவதே இல்லை. அவர்ரவர் இறை நம்பிக்கைக்கு ஏற்றவாறு அவர்களை எவ்வுருவத்திலாவது இறைவன் காத்து விடுவார். இறை நம்பிக்கை இளமையில் விதைக்கப்பட வேண்டியவை.


இறைவனை உணர்ந்து சொல்


இறைவன் நாமத்திற்கு அத்தனை பலன் உண்டு. அது நம்பிக்கை வடிவிலேயே பலம் பெறுகிறது. ஒரு குளத்தில் கல்லை போட்டால் எப்படி வட்ட வடிவமாக அலை எழும்பி விரிவடைகிறதோ. அது போல் இறைவனின் நாமம் உன் நாடி நரம்புகளில் பரவும். ஒரு இனிமையான இறை இன்பத்தை மனம் அனுபவிக்கும். நம்மில் உள்ள துன்பம் பறந்தோடிவிடும். இன்பமயமான தொரு உலகில் நீங்கள் சஞ்சரிக்கலாம். முதலில் விடாது தொடர்ந்து இறை நாமத்தை உணர்ந்து உணர்ந்து சொல்லுங்கள். சொல்லின் செல்வன் உங்களுக்குள்ளேயே இன்பமாக பரவி நிற்பான்.


இறை பலன்


இறை நாமம் ஒரு மனிதனின் மனதை செம்மை படுத்தும். இதை யார் சென்னாலும் பலன் பெறுவார்கள். மரம் ஏறி குரங்கு பிடிக்க முடியாது. அது போல் மனதையும் பிடிக்க முடியாது. குரங்குக்கு தீனி போடுவது போல்இ மனதுக்கு பிடித்தமான மந்திரத்தை தந்திரமாக கொடுக்கும் போதுஇ மனம் தன்னால் அடங்கி தன்னுள்ளேயே இருக்க தொடங்குகிறது. இறைவன் நாமத்தை விட மேன்மையான ஒப்பான சொல் உலகில் வேறு இல்லை. இறைவனுக்கு நிகர் இறைவனே.


அன்பே சிவம்


இறைவன் மிக இனிதானவர் அவரிடம் பழக மந்திரம் தேவையில்லைஇ தந்திரம் தேவையில்லை அன்பு அன்பு ஒன்றே போதும். அன்பே சிவம் அன்பால் இறைவனை பிடிக்கலாம். இறைவனுக்கு பிடித்தவாறு அன்பாய் இரு. இறைவனை போல் எவ்வுயிரையும் சமமாய் பாரு. இறைவனை போல் அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இரு. எல்லாவுயிரும் உன்னை விரும்பும்இ புல்இ பூண்டுஇசெடிஇமிருகம் முதல் உன்னை நேசிக்கும். ஆனால் உண்மையான அன்பு உன்னில் இருக்குமானால்இ எவ்வுயிரும் உன்னை வணங்கும். அன்பே சிவம்- நீ ஆனதால்.


மெய்


இறை நாட்டம் அதிகமானால் இறை தேடல் அதிகம் ஆகும். உண்மையை தேடுபவன் ஒரு நாளும் ஏமாற்றப்பட மாட்டான். அவன் தேடும் மெய் பொருள் அவனிலும் உள்ளது. ஆனால் மெய்யை மெய் அறியும். அவன் மெய்யாக இங்கு வருவான் அதற்கும் இறைவனே வழி காட்டுவான். அவனின் தேடலும்இ இறை பசிக்கு ஏற்றவாறு பலன் உண்டு. இறைவனை அடைந்தே தீருவேன் என்று பர வைரhக்கியம் உள்ளவன்- இறைவனை மட்டுமே வேண்டுவான். இறைவனையே அடைவான்.


உன்னைதேடு


இறைவனை அடைய எத்தனையேh வழிகள் உண்டு. அதில் ஒன்று துறவு எதுவும் இல்லாதவன் துறப்பதும். எல்லாம் இருந்தும் துறப்பதும் உண்டு. அதாவது ராஜ்ஜியம் இருந்தும் அதை துறப்பதும் துறவு. எதுவும் அற்றவன் பந்தபாசம் துறப்பதும் துறவு. உலகியில் இன்பங்களில் இருந்து மனம் விடுபட வேண்டும். இறைவனுக்காக தபம் செய்து இறை சிந்தனைஇ இறை செயல்இ இறையின்பம் கண்டு இறைவனில் ஐக்கியமாக தபம் எடுக்கப்படும் செயலே துறவு. துறவு எடுத்து பின்னும் மனம் உடல் பற்றி இருந்து உயிர் விடுப்பட்டு ஆன்மாவோடு லயமாகி பயணிக்கும் வழி அறிந்து தபம் செய்.


கேளாது செய்பவன் இறைவன்


இறைவன் மட்டுமே எந்த எதிர் பார்ப்பும் இல்லாதவன். நீ அவனை தொழுதாலும் தொழா விட்டாலும் உனக்கு உதவி செய்வான். நீ உன் குடும்பத்துக்கு மட்டுமே உழைப்பாய். இது போல் நம்மில் அல்லாத பல லட்சம் கோடி ஜுவராசிகளுக்கு கேட்காமலேயே படி அளந்து கொண்டு இருக்கிறார். ஓர் உயிரையும் ஒரு வேளை உணவு இல்லாதுஇ அவன் உறங்கவிடுவது இல்லை. ஜுவ கருணை நிறைந்தவன் இறைவன். நம்மையும் காக்கவல்லவன் இறைவன் ஒருவனே. அவனையே எண்ணியே எல்லா வேலையையும் செய். இறைவனுக்கு என்று உதவி செய் உனக்கு கொடுத்த பொருள் எல்லாம் இறைவனுக்கே உரியது. அது என்றும் பரிசுத்த மானதேஇ ஆதலால் இறைவன் படைத்தது எல்லாம் புனிதமானது. அதை உண்ணவோ வாங்க மறுக்கவோ செய்யாதே. வாங்கியும் அதை வீணாக்காதே. இறைவனுக்கு உரிய பொருள் எல்லாவற்றையும் இறைவனாக பாவித்து அதைப்பாதுகாத்து வைப்பது ஒவ்வொருவருடைய கடைமையாகும். ஒருவருக்கு தர்மம் செய்யும் போது கர்மம் கழிய என்று செய்யாதேஇ உதவி செய்வதாகவே செய். இறைவனுக்கே செய்வதாக நினைத்து செய். முழு பலன் அடைய இந்த தர்மம் எக்காலத்திற்கும் பொருந்தும்.


ஒன்றை தேடு


இறைவன் ஈடு பாடுடையவர்கள் ஒரு பொதுவான காரியத்தை அனுசரிக்க வேண்டும். இறைவன் திருவுருவப்படம் எல்லா தெய்வங்கள் படத்தையும் வைத்துக்கொண்டு இருக்காதீர்கள். எல்லா தெய்வ படத்தை வைத்துக்கொண்டு அவரவர் பிடித்த தெய்வத்திலும் பண்ண முடியாது. நிறைய சுவாமிப்படம் இருந்தால் சுத்தம் செய்து பூஜை முடிக்க நீங்கள் களைப்பாகி விடுவீர்கள். ஆதலால் ஏதாவதொரு பிடித்த இறைவன் படத்தில் ஒன்றை வைத்து அதற்கு ஒரே விளக்கு ஏற்றி தொழவும். அதிக சுவாமிப்படம்இ விளக்குகள்இ அதிக வேலையையும்இ உங்களுக்கு பூஜையில் களைப்பையும் தந்துவிடும். அதிகநேரம் பூஜையில் அமரமுடியாது செய்துவிடும். ஒன்றை தொழுது ஒன்றை பிடித்து ஒன்றையே அடையுங்கள்.


இறைவனுக்காக நேரம் ஒதுக்கு


இறைவன் தொழும் போது உங்களுக்கு பிடித்தமான முறையிலேயே தொழவும்இ உங்கள் நேரத்தில் இறைவனுக்கு என்று நேரத்தை ஒதுக்கவும். அது உங்களுக்கானதாக இருக்கும். அதிகாலையில் இறைவனை தொழவும். அது உங்களுக்கு நிரந்தமானதாகவும் எந்த தொந்தரவும் இடைஞ்சலும் இருக்காது. பிரம்ம முகூர்த்த நேரத்தை பயன்படுத்துங்கள். எப்போதும் பூஜை எந்த நேரமும் இதுவே. ஒரு மணி நேரமாவது குறைந்தது தியானிக்க பயன்படுத்துங்கள். எக்காரணம் கொண்டும் இந்தநேரத்தை தவறவிடாதீர்கள் இதற்கு தடங்லே வராது. இந்த நேரம் இறைவனுக்கான நேரம். இறைவனை காணும் நேரமhக பாவியுங்கள்.


மன ஆரோக்கியம்


இறைவனை மிக சந்தோஷமான மனநிலையில் தொழ கற்றுக் கொள்ளுங்கள். உலகில் வரம்பில்லா செல்வம்- முதலில் நம் உடலே ஆகும். நம் உடலின் ஆரோக்கியத்திற்கு நன்றி சொல்லுங்கள். நம்மிடம் இருப்பதை பத்திரமாக பாது காத்து மன நிறைவுடன் பர்த்தால் அது மனநிறைவைத் தரும். மனமும் ஆரோக்கியமாக இருக்கும். எந்த ஒரு பொருளையும் அளவுக்கு மீறி சேர்க்காதீர்கள். பிராருக்கு விரோதமான செயல் செய்யாதீர்கள். நம் சந்ததியினருக்கு; பாகுபாடு உண்டு பண்ணும் மிகபெரிய சொத்தாக இருந்தால் அது குடும்பத்தைப் பங்குபோட்டு விடும். இறைவனே மிகnபரிய சொத்து- எந்த தருணத்திலும் உதவும்.


இறைவனே மேல் பார்வை ஆவார்


இறைவன் மிக பெரிய நிறுவனத்தின் தலைவன். நிறுவனத்திற்கு மனேஜர்இ கணக்கர்இ ஆய்வாளார்இ உற்பத்தியாளர்இபாது காவலர் என்று நிறுவனத்துக்கு வேண்டிய பலதரப்பட்ட வேலையாட்கள் உள்ளனர். நிறுவனரோ எல்லாம் இயங்குவதை பார்த்துக் கொண்டு இருப்பார். மற்றவர்கள் உற்பத்தி தரம்இ தவறுஇ பாதுக்காப்புஇ என்று கவனிப்பார்கள். இதுபோல் உலகின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒவ்வொரு மேற்பார்வையாளர்இ இயக்குநரை அமைத்துவிட்டு இறைவன் எல்லாவற்றையும் மேற் பார்வையாளராகவே இருக்கிறார்.


நல்லவரின் நல்ல நண்பன் யார்

இறைவன் உலக இயக்கத்திற்காக பல தரப்பட்ட தெய்வங்கள் உள்ளன. அவை பஞ்சபூதம்இ அதிதேவதைஇ தேவர்கள்இ துர்தேவதைகள்இ நாக கன்னிகள் என்று பலர் உள்ளனர். அவற்றில் எது உண்மையான உருவம்இ சத்திய வழி சாந்த செhரூபம் போன்ற அமைதியுடைவர்களை தொழவேண்டும். துர்குணம் உடையவர்களுக்கு அவர்கள் வேண்டாமலேயே துர்தேவதையே உதவி செய்யும். நம் நல்ல மனதோடு சத்திய செhரூபம்இ சாந்தி தரும். நாம செhரூபத்தை தேர்வு செய்து தொழவேண்டும். கெட்டவனுக்கு கெடுதல் செய்ய நல்லவனால் முடியாது. இது போல் நல்ல தெய்வமும் உதவ முடியாது.


அமைதியான குணம்


இறைவனுக்கு ஏன் இவ்வளவு ஆயுதம் உள்ளது. அதனால் உன் இறைவனை தொழhதே என்பார்கள். சமையல் அறையில் காய் வெட்ட எல்லா ஆயுதமும் இருக்கும். நீ அவ்வாயுதத்தை வேண்ட தகாதவற்றிற்கு பயன்படுத்துவாயா? உன்வீட்டில் ஆயுதம் இருந்தால் நீ கெட்டவன் இல்லையே. அது போலவே மக்களைக் காக்கும் தெய்வத்திடம் எல்லா ஆயுதம் இருந்தாலும் அதை பயன்படுத்துவது இல்லை. கருணை குணமானவரே தெய்வம். உன் தீய குணத்தை அழி. உன் (தூளியில்) மனதில் அம்பு என்னும் (கோபம்) இருக்கலாம். ஆனால் அதைப் பயன்படுத்தாமல் எண்ணம் அற்ற மென்மையான வெண்மைக்கு வாருங்கள். மனசாந்தி எப்போதும் உங்களுடன் இருக்கும்இ அமைதியான குணம் மட்டுமே பேர் ஆனந்தத்தை தரும்.


முன்னுரை


தியானம் ஒவ்வொரு மனிதனும் கற்று உணர வேண்டியது. நற் பண்புகளுக்கு அடிப்படையாக அமையும் புதியதோர் உலகுக்கு தியானம் அவசியம். உலக போர் வராது காக்க தியானம் அவசியம். உலக பிரபஞ்சத்தின் இயற்கை சீற்றம் குறைத்து காக்க வல்லது தியானம். இனம் மதம் மொழி நாடு கடந்தும் பரவவும்- கற்க வேண்டியது தியானம்.


எல்லா மதத்தினருக்கும் தேவையானது தியானம். உலக அமைதியை தரவல்லது தியானம். ஒவ்வொருவரது அமைதியும் நாட்டின் மேன்மையையும் தருவதும் தியானமே . தலைமுறை, சந்ததிகள், இயற்கை மற்றும் நவீனமான கண்டுபிடிப்பால் வரும் நோய்இ நவீன மருந்து, உணவு, உடை, உறைவிடம் நவீன விஞ்ஞான இவற்றால் வரும் பின்விளைவுகளின் தாக்கத்தையும் தவிர்க்கலாம் தியானத்தின் மூலமாக. தெய்வீகமனது தியானம். தியானத்தால் மட்டுமே அடைய கூடிய நித்திய அமைதியை வேறு எந்த உலக பொருளாலும் அடைய முடியாது. அமைதியை அடையும் வழியில் தலைசிறந்தது தியானமே.


தியானம் மந்திரங்கள் தீட்சையாக பொறுங்கள் . தியான மந்திரத்தை புலன்களால் உற்று கவனியுங்கள் . அப்போது தியான மந்திரம் ஒவ்வொரு சொல்லும் தெய்வீக அலைகளாக நாடி நரம்புகளில் பரவும். இவ்வாறு பரவும் வேளையில் நீங்கள் விழிப்போடு கவனிக்கவும். மந்திரத்தில் உங்கள் கவனம் இருக்கட்டும் மந்திரத்தில் தெய்வீகம் உங்கள் உடல் முழுவதும் பரவும். இவ்வேளையில் மந்திரம் மனம் எண்ணம்- அற்று தெய்வீக சொல்லாக இருபீர்கள் இதை அனுபவியுங்கள் இதுவே தியானத்தின் முதல் நிலை ஆகும். மந்திரம் இறைநாமமhக தரப்படும். இறைவன் வேறு நாமம் வேறு அல்ல. இறைவன் இறைநாமம் மிக வலிமை வாய்ந்தது. இறைவனுக்கு நிகரானது எல்லா வல்லமையும் தரக்கூ டியது. எல்லை இல்லh ஆற்றல் மிக்க இறைநாமம் உங்கள் எண்ணங்களை தூய்மை படுத்திஇ இப்பிறவியி லேய இறைவனை உணர்த்த உதவி புரியும்.


இறைவன் மிக பெரிய கருணையாளன். அன்பு மயமhனவர் மிகபெரிய பொறுப்புகள் உடைய பாதுகாவலர் ஆவர் . இவரின் உதவியை இவர் நாமமே பெற்று தரும். இறைவன் கண்கள் இல்லாது பார்த்தம்;;, காது இல்லாது கேட்டும்இ மூக்கு இல்லாது நுகர்ந்தும், வாய் இல்லாது பேசியும்இ கைகள் இல்லாது உதவியும்இ கால் இல்லாது துணை வந்தும் காக்கிறார். உள்ளும் புறமாக நம்மில் இருந்தும் பலவடிவhனவரhக இறைவன் இருக்கின்றhன். சூட்சுமமானதாக உதவுகிறார். பிறர் மூலமும் உதவுகிறார் .


ஆனால் உதவி செய்ய அவருக்கு உறுப்புகள் தேவை இல்லை. ஆனால் அவர் நமக்கு உதவ நமக்கு தான் நல்ல மனம் வேண்டும். இறை நாமம் எவ்விடம் ஆனாலும்இ எந்த ஊர் நாடு மனிதன் இல்லாத இடம் இருபினும்- இறைவன் நாமம் நம்மை காக்கும். இறைவன் நாமமே இறைவன்.



சத்குரு அம்மா (குரு தரிசனம் ) நிகழ்வுகள் : திருவண்ணாமலை அன்னதானம் மற்றும் கிரிவல சிவதல வழிபட்டு குழு நடத்துனர்கள் திரு . ரமேஷ் பில்டர் மற்றும் திரு. பரத் (magic bite )

 

ஓம் சிவ புவன சாந்தி
ஓம் சகல ஜீவ சாந்தி
ஓம் என மன சாந்தி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
மேலும் படிக்க
அன்னதானம்

பிரதி பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்கபடுகிறது

15-1-2015 புதிய தருவிப்பு
புதிய செய்தி

சிவம்--சிவன்

15-10-2014 தருவிப்பு
புதிய செய்தி

அறிவித்தல்(தியானேஸ்வர் பீடம்)

சத்குரு சிவராஜேஸ்வரி அம்மா-வின் வருகையின் மகிமை(சத்குரு அம்மா)

15-09-2014 தருவிப்பு
புதிய செய்தி

முதல் தேடல்(இறைவனை தேடுபவர்களுக்கு ஒரு அற்புதமான தருவிப்பு

அம்மாவின் கைவண்ணம்

1-09-2014 தருவிப்பு
புதிய செய்தி

அம்மாவின் பாடல்கள்

1-06-2014 தருவிப்பு
செய்தி

சத்குரு அம்மா (குரு தரிசனம் )

தியானேஸ்வர்: மெளனயோகி ஆறுநாட்கள் ஒளி

தியானம்: என்தேகமே     சிவார்ப்பணம்

தியானம்: சிவமே சிவமங்களம்

15-03-2014 தருவிப்பு
செய்தி

திருவண்ணாமலை ஜோதி(தீப தரிசனம்)இரகசியம்

யோகி தியானேஷ்வர் சிவ குரு (இறைவனை குருவாக பாவித்தல்)

தியானம் -குரு (விசேட பார்வை )

go back to the top