Arunachaleshwarar
ஓம் திரிகயிலை புகழ்மாலை

ஓம் சொரூப அனாதக சிவவிந்தே
சிவ அகப் பொருளாய் ஆட்கொள்வாயே
அம்பலத்தாடிய அருந்தவ சிவ கூத்தே
சிவஅன்பாய் எழுந்தருளும் எம் அகந்தனில்
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் ஏகமாய் நின்ற சிவ ஐந்தொழிலே
ஏகாந்தமாய் இயங்கும் சிவ சுடரே
எண்ணிலா இன்ப சிவ பெருமானே
ஏக சிவ கருணையை ஏது சொல்வேன்
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் பல உயிரின் பல சிவவடிவே
பகலவனாய் பரி மளிக்கும் சிவ சுடரே
பல பல உருகொண்ட சிவ பல்லாண்டே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

உயிராய் உடல் எடுத்த சிவ அகரமே
உயிராய் உள் ஒளிர்ந்த சிவ உகரமே
உயிராய் பரவி நின்ற சிவ மகரமே
உயிராய் பாதுகாக்கும் சிவ பரஞ்ஜோதியே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

எங்கும் எதிலும் இயங்கும் சிவ அகம்பரமே
எங்கும் எதிலும் இணைந்த சிவ ஏகாம்பரமே
எங்கெங்கும் எழுந்தோங்கும் சிவ திகம்பரமே
என் கண்ணுள் தேடிப்பிடித்த சிவ அகம்பரமே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் அண்டத்து ஆபத்து சிவ அதிபதியே
அண்டத்துக்கு அருளும் சிவ குணபதியே
அண்டத்து உயிரான சிவபதியே
அண்டத்து ஆசானும் நீ சிவ குருநீதியே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் நாதன் சிவம் ஆகிய நமசிவாயமே
நாதன் சிவம் ஆகிய தச ஒளியே
நாதன் சிவம் ஆகிய நவரசமே
நாதன் சிவம் ஆகிய சிவ நாயகியே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் மூலமும் முதலும் ஆகிய சிவ முதல் பொருளே
மூலமும் ஆன நீல சிவமானவரே
மூலமும் புலங்கிட்ட சிவ புவன விருந்தே
மூலமும் ஆன சிவ பாதமே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் சிவபரன் ஆன சிவ அருளே
சிவ பரன் ஆன சிவக்கொழுந்தே
சிவ பரன் ஆன சிவ சிவனே
சிவ பரன் ஆன சிவ நடராஜனே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் ஐம்முகம் தாங்கிய சிவ அகம்பரனே
ஐம்முகம் தாங்கிய நாதன் நமசிவாயமே
ஐம்முகம் தாங்கிய சிவ திருகயிலை மலையே
ஐம்முகம் தாங்கிய சிவ பனிமலையே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் சூட்சுமமாய் நின்ற சிவபரமாத்மனே
சூட்சுமமாய் நின்ற சிவ ஒளிர்வண்ணனே
சூட்சுமமாய் நின்ற சிவ குண்டலினியே
சூட்சுமமாய் நின்ற சிவ உயிர்துடிப்பே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் தத்துவம் காட்டிய சிவ கயிலை மலையே
தத்துவம் காட்டிய திருநீர் மேனியே
தத்துவம் காட்டிய சிவ சிதம்பர ரகசியமே
தத்துவம் காட்டிய சுடலை சிவ பெருமானே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் நிகரற்று நின்ற சிவ நிர்குணமே
நிகரற்று நின்ற சிவ நீச்சலமே
நிகரற்று நின்ற சிவ வானவியே
நிகரற்று நின்ற எந்தன் சிவருத்ரனே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் காரண காரியலோக சிவ ரசமே
காரண காரிய சிவ லோக கற்பகமே
காரண காரிய லோக சிவ பிறவாதவனே
காரண காரிய லோக சிவ சம்பவிப்பவனே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் பனிமலையாய் பரிமளிக்கும் சிவ ஆதியனே
பகலவனாய் வெளிவந்த ஜோதியனே
பாருக்குள் எல்லாம் பெரிய பிரகதீஸ்வரனே
பார்த்தவர் பாவம் போக்கும் பரமகர்த்தனே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் ஐந்து எழுத்தில் உருவான சிவாயனே
ஐந்து எழுத்தில் உருவான சிவ மந்திர யந்திரனே
ஐந்து எழுத்தில் உருவான சிவமேரு மலையனே
ஐந்து எழுத்தில் உருவான சிவ அசராதவனே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் சாதுக்கள் மனகோயில் கொண்ட சிவ சாதகனே
சாரதியாய் உலகம் சுழற்றும் சிவ சாதகனே
சமவேதம் கேட்ட லோக சயசயரதனே
சலிக்காது தொழும் மனதை சிவ சார்ந்தவனே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் வேண்டுபவர் மனம் எழுந்தருளும் சிவகாருண்யனே
வேண்டுபவர் மனம் எழுந்தருளும் சிவபாவநிவர்த்தனே
வேண்டுபவர் மனம் எழுந்தருளும் சிவஸ்துதிகர்த்தனே
வேண்டுபவர் மனம் எழுந்தருளும் சூட்சுமனே
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

ஓம் பொங்கு புகழ் ஓங்கும் சங்கதமிழ் சிவநாதன்
பொங்கு புகழ் ஓங்கும் சிவபுனித நீதியினன்
பொங்கு புகழ் ஓங்கும் சிவபுலவர் மதிநாதன்
பொங்கு புகழ் ஓங்கும் சிவ பரமவெளிநாதன்
ஓம் திருகயிலை மலை நாதனே போற்றி போற்றி

தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
தொடரும்...
நிகழ்வுகள்
தியானேஸ்வர் நித்திய காரி    பூஜை விவரம்.

திங்கள் -         திரு. K. ராஜா அவர்கள்
செவ்வாய் -    திரு. C. ரமேஷ் (C.C. பில்டர்) அவர்கள்
 

ஞாயிறு -        திரு. குமரேசன் அவர்கள்
                          திரு. P. ராஜேந்திரன்
(Heigh way )  அவர்கள்




கோவில்   பராமிப்பு   மேற்பார்வை
திருமதி சாந்தி - கஜேந்திரன்.



கைலாய வாத்திய குழு நடத்துனர் : சிவதாஸ் அவர்கள்
(செல் ; 9444813781) 
 : சுனிதா - பாபு அவர்கள்
( செல் : 0942541759)




உழவாரப் பணிக்குழு நடத்துனர் : திருமதி . சுனிதா - பாபு அவர்கள்
(செல் : 0942541759)




Designed & Maintained by : Thiyaneswar Peedam Charitable Trust  by Dzine Corner Mr. Janardan
 

go back to the top