Arunachaleshwarar
சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி

ஓம் பரி பூரணத்துவ மாதா
ஓம் பரி பூரணத்துவ பிதா
ஓம் பரி பூரணத்துவ குரு
ஓம் பரி பூரணத்துவ தியானேஸ்வர்


  சத்குரு சிவராஜேஸ்வரி அம்மா-வின் வருகையின் மகிமை


 • சிவம்


  சிவம் அனைத்து அண்டங்களுக்கும் அப்பாலுக்கும் அப்பால் காரிருளினையும் தாண்டி பர வெளியில் மிகப்பிரமாண்டமான ஒளியிலும் பிரகாசமான பேரொளியே ஆகும். எமது சத்குருவினால் உணர்ந்து எமக்கு உணர்த்திய பெரு வெளியின் பரம் பொருளே சிவமாகும். எமது சத்குரு அவர்கள் இவ்வுணர்வினை ஓர் வரியில் "அகண்ட பெரு வெளியின் பரம் பொருள் சிவம்" என மிகப் பெரிய சூட்சும இரகசியத்தினை தெரிவித்து எனக்கும் ஞானத்தின் வெளிப்பாட்டினை ஊட்டியிருந்தார்கள்;. பல அண்டங்களுக்கும் அப்பாலுக்கும் அப்பால் அனைத்து உலகங்களையும் அடக்கி ஆழும் பேரொளியே சிவமாகும். தற் போதுள்ள அதி நவீன ஆராட்சிகளிலும் எமக்கு புலப்படும் புலப்படாத ஒளி தோன்றும் அனைத்துமே இந்த பேரொளியிலிருந்து ஒளி பெற்றவையே ஆகும். இதுவே மிகப்பெரிய சூட்சுமமுமாகும். இதுவரை காலங்களிலும் ஒரு சில சித்த புருஸர்களால் மட்டுமே உணர்ந்து கொண்ட மாபெரும் விடயங்களின் வரிசைய் எமது சத்குருவால் தெரிவிக்கப்ப-ட்டதனை, இந்த உலகிற்கு தெரிவிப்பதில் பேரானந்தம் கொள்கிறேன். அதி அற்புதமான ஆன்மிக விடயங்களை வெளி உலகத்திற்கு கொணர்ந்தவர்கள்,சித்தர்கள், முனிவர்கள், யோகிகள், மகான்கள், சித்த புருஸர்கள் போன்றவர்கள் ஆவர். அந்தவகையில் இவற்றை எல்லாம் மிஞ்சியவராக எமது சத்குரு அவர்கள் உயர்ந்து இருப்பது எம்மை எல்லாம் மட்டுமல்லாது உலகத்து அனைவரையுமே வியப்பில் ஆழ்ந்தும் அதிசயிக்கவும்வைத்துள்ளது. அது மட்டுமல்லாது இந்த கலியுகத்தில் அந்த பேரொளி வரை பயணித்தும் உணர்ந்தும் தனது தவ வலிமையின் பயனாக பெற்றுக்கொண்ட இறை சத்தினை தன்னால் வளர்க்கப்படுகின்ற சிஸ்யர்களில் யோகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களுக்கு போதிப்பதில் மாபெரும் சக்தியாக பிரம்மமாக இருப்பதும் பேரானந்தத்தையே தருகிறது. தற்போதுள்ள நவீன உலகில் "புற்றில் இருக்கும் பாம்பு போல்" தன்னை வெளி உலகிற்கு காண்பிக்காது, எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பேரொளியின் ஒளிக்கீற்றாக இருக்கும், எமது சத்குரு அம்மா அவர்களை தரிசிக்கும் பாக்கியம் பெற்றுள்ளோம் என்பது பெருமையிலும் பெருமையடைகிறோம்.
  இதுவரை காலத்திலும் கடுமையான தவயோகம் இல்லாதவர்கள் யாராலும் பார்க்கவோ உணர்ந்து கொள்ளவோ முடியாத பரம சூட்சும இரகசியமாகும். அவ்வாறான அருமையிலும் மிக சூட்சுமமான சிவத்துவமான இரகசியங்களிலெல்லாம் தனது கடுமையான தவ யோகத்தினால் எமக்கு ஊணர்த்தியதை உலகத்தோரும் தெரிந்து கொள்வதற்;காக மேலே உள்ள பட விளக்கத்துடன் தெரிவிப்பதில் அளவற்ற ஆனந்தமடைகிறோம். இதனை எமது சத்குரு அவர்கள் "அண்டமுமாய்
  அதுவுமாய் பரந்து விரிந்து அருவமாய் ஆட்சி செய்யும் பரம்ம ஆன்மா" என ஓர் வரியில் பரம இரகசியத்தினை தெரிவித்து எம்மை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். இதுவரையில்
  யாராலும் வெளிவிடப்படாத பரம இரகசியத்தினை எம்மால் வெளியிடுவதின் பெருமையினை எமது சத்குரு அம்மாவின் பாத கமலங்களிற்கு காணிக்கையாக்குகிறோம்.

 • சிவன்


  எமது சத்குருவால் உணர்த்தப்பட்ட ஈரேழு உலகங்களுக்கும் அண்ட சராசரங்களுக்கும்; அப்பால் இருக்கும் சிவமானவர், தனது திருவிளையாடல்களாக தோற்றுவிக்கப்பட்டதே இந்த நடசத்திரக் கூட்டமாகும்.இதே போல் கோடான கோடி சூரிய கோள்கள் கூட்டத் தலைவன் சிவம் ஆகும். இந்த நட்சத்திரக்கூட்டத்தில் சூரியனை தலைமையாகக் கொண்டுள்ளதே நாம் வாழும் பூமியும் அதனைச் சார்ந்த கோள்கள் கூட்டமுமாகும்.
  இச் செயல்பாட்;டினையே எமது சத்குரு அவர்கள் "அகண்டம் முதல் அதுவரை ஆய்ந்து, அறிந்து, இயக்கி, ஆழ்வது"- சிவன் என்றார். இதனை தனது கடுமையான தவ யோக வலிமையில் தத்துவ மசி அதுவாகிய நிலையிலிருந்து
  எமக்கு உணர்த்தியிருந்தார். இந்நியைpலேயே அருவமற்ற சிவம் உருவ நிலையாகிய சிவன் வருகிறார். இந்த சூட்சும இரகசியத்தினை மேலும் விளக்கமாக "அருவமுமாய் உருவமுமாய் அகில ஜீவ ஆன்மாவுமாய் இயக்குவது" - சிவன். இதுவரை காலத்திலும் யாராலும் வெளிவிடப்படாத பரம இரகசியனின் ஜீவ இரகசியத்தினை எமது சத்குரு வின் வரிகள் எம்மை எல்லாம் பேரானந்தத்தில் மிதக்க வைக்கின்றது. பூகோள சஞ்சாரத்தில் அனைத்து ஜீவன்களினதும் தோற்ற இரகசியம் எமது சத்குருவினால் உணர்த்தியதை, இப்பூவுலகத்தோற்கும் தெரிவிப்பது எமக்கு கிடைத்த பேரானந்தமாக கருதுகிறோம். மேலே தரப்பட்ட பட விளக்கத்திலிருந்து நட்சத்திர பூகோள கூட்டத்தின் தலைவன் சிவன் என்பதில் எண்ணற்ற ஆனந்த மடைகிறோம்.

 • தியானேஸ்வர்


  எமது சத்குருவினால் உணர்தப்பட்ட எம்மால் உணர்ந்து கொள்ளப்பட்ட அண்டசராசரங்களின் அதிபதி சிவம் எனவும், சிவத்தாண்டவத்தின் தோற்றமாக நட்சத்திர பூகோள கூட்டத்தின் அதிபதியாக சிவன் என்பதுமாகும். தொடர்ந்தும் எமது சத்குருவினால் "உயிரின் இயக்க நிர்வாகி தியான-ஈஸ்வரன்" தியானேஸ்வர். எனும் தனது குறளினூடாக உயிர்களின் இயக்க நிர்வாகி தியானேஸ்வராக தியான நிலையில் ஆட்சி செய்யும் சூட்சும இரகசியத்தினை எம்மால் புரிந்து கொண்டதை உலகத்தோருக்கும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.
  மேலும் சத்குருவின் உபதேசத்தில் "இறைவனே உலகம், உலகமே இறைவன் அது யானே அதன் ஈஸ்வரன் - தியானேஸ்வர்".
  இந்த பூவுலகிலுள்ள அனைத்து உயிர்களின் தோற்றம், வளர்ச்சி, மறைவு ஆகிய இயக்கங்கள் அனைத்தையுமே தனது தியான யோக நிலையிலேயே ஆட்சி செய்கின்றார் எனும் பரம இரகசியனின் மாபெரும் இரகசியத்தினை இப்பூவுல - கினோற்கு தெரிவிப்பதில் எண்ணற்ற மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து ஜீவ ராசிகள் என்பதில் கண்ணுக்கு தெரிகின்ற, கண்ணுக்கு புலப்படாத அனைத்து உயிரினங்கள் மட்டுமல்லாது மரம், செடி, கொடி போன்ற அனைத்துமே உள்ளடங்கும். மேலும் அனைத்தையும் இயக்கும் பஞ்ச பூதங்களான - வற்றிற்கும் இயக்கும் அதிபதியாகவே தியானேஸ்வர் உள்ளார் என்பதனை எமது சத்குருவினால் உணர்த்தியதை உலகத்தோற்கு தெரிவிப்பதில் பன்மடங்கு பேரானந்தத்தை அடைகிறேன். இதனை மேலே உள்ள படத்தின் மூலமாக நாமெல்லாம் புரிந்து கொள்ள வைப்பதற்கு, எனக்கும் ஒரு பாக்கியம் கிடைத்ததில் மேலும் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

 • யோகி தியானேஸ்வர்


  இது வரையிலும் எமது சத்குருவினால் உணர்த்திய சிவம் - நிலை, அதனை தொடர்ந்து சிவன் - நிலை, அதனை தொடர்ந்து தியானேஸ்வர் நிலை என்பதனை தெளிவாக தெரிவித்திருந்தோம். அது
  மட்டுமல்லாது சிவத்தின் பேரொளியின் ஒளிப்பிளம்பாகவும், சிவனின் உருவக அமைப்பிற்கும், தியா- னேஸ்வரரின் ஆட்சி அமைப்பிற்கும் ஏதுவாக யோகி தியானேஸ்வரராய் இப்பூவுலகினை ஆட்சி செய்கின்றார.; ஆன்மிக வழிகாட்டுதலுக்கும், ஆன்மிக வழிகாட்டுதலுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள - தியானம் - சிவயோகம், ஆன்மிகம் - சிவஉலகம் எனும் இரு வழிகளில் இப்பூமிதனை யோகி தியானேஸ்வர் முன்னிலையில் எமது சத்குருவினால் வழிகாட்டி முன்னெடுத்துச் செல்வதில் அவர்- நிழலில் இருக்கும் நாமெல்லாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.
  எமது சத்குருவின் நேரடி வழிகாட்டுதலுடனும், சீரான அறிவுறுத்தல்களுடனும், முறையான பயயிற் -சிகளுடனும், அவரவர் பிரார்த்தங்களிற்கு அமைவாக அவரவர்க்கே உரித்தான தீக்ஸை மந்திரங் - களையும் வழங்கி, எமக்கெல்லாம் ஓர் ஜோதியாக இருக்கும் எமது சத்குரு சிவராஜேஸ்வரி அம்மாவின் பாத- கமலங்களிற்கு தியானேஸ் பீடம் அறக்கட்டளையினூடாக சிரம் தாழ்த்தி சமர்பிக்கின்றோம்.
  மேலே தரப்பட்ட பட விளக்கத்துடன் இப்பூமியினை ஆட்சி செய்யும் தியானேஸ்வர் யோகி தியானேஸ்வர் சரணம் , சரணம் , சரணம் .
  ஆக்கம் அமைப்பு உருவாக்கம்
  சத்குரு அம்மாவின் சிஸ்யன்
  கே. ராஜா (யோகி ராஜ்)

  குறிப்பு:
  29-10-2014 இன்றைய தேதியில் முதன் முதலாக பரம ரகசியனின் சூட்சும ரகசியத்தனை எமது சத்குருவினால் எடுத்துணர்தப்பட்டதை, அவரது சிஸ்யன் கே.ராஜா (யோகி ராஜ்) மூரமாக முதன் முதலாக இந்த உலகிற்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இதன் அனைத்து ஊரிமம் தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை பதிவு எண்;: 193-2013-iV பம்மல் சென்னை 75 செல்: 0091-9789062172 , 0091-9444070887


                   :  

ஓம் சிவ புவன சாந்தி
ஓம் சகல ஜீவ சாந்தி
ஓம் என மன சாந்தி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளைமேலும் படிக்க
அன்னதானம்

பிரதி பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்கபடுகிறது

15-1-2015 புதிய தருவிப்பு
புதிய செய்தி

சிவம்--சிவன்

15-10-2014 தருவிப்பு
புதிய செய்தி

அறிவித்தல்(தியானேஸ்வர் பீடம்)

சத்குரு சிவராஜேஸ்வரி அம்மா-வின் வருகையின் மகிமை(சத்குரு அம்மா)

15-09-2014 தருவிப்பு
புதிய செய்தி

முதல் தேடல்(இறைவனை தேடுபவர்களுக்கு ஒரு அற்புதமான தருவிப்பு

அம்மாவின் கைவண்ணம்

1-09-2014 தருவிப்பு
புதிய செய்தி

அம்மாவின் பாடல்கள்

1-06-2014 தருவிப்பு
செய்தி

சத்குரு அம்மா (குரு தரிசனம் )

தியானேஸ்வர்: மெளனயோகி ஆறுநாட்கள் ஒளி

தியானம்: என்தேகமே     சிவார்ப்பணம்

தியானம்: சிவமே சிவமங்களம்

15-05-2014 தருவிப்பு

தியானம் - சிவயோக விளக்கம் (காயத்திரி மந்திரம் பெயர்விளக்கம்)
சூரிய நமஸ்கார விளக்கம் இரகசியம் மெய்தியானம் சிவதியானம் சிவனிலை மெய் பொருளைக் காணுதல் சிவ சூத்திரம் சிவ மந்திரம் சுத்த சிவம்- மெய் மறப்பு திருவண்ணாமலை-வெள்ளாள மகாராஜா வரலாறு.


go back to the top