Arunachaleshwarar
திருவண்ணாமலையே திரு கயிலை

மனித ஆத்மா, பரமாத்மாவுடன் கலக்க ஒரே வழி பக்தி மார்க்கம் தான். இறை தரிசனம் தரக்கூடிய கோயில்கள் பல இருப்பினும், அவை அனைத்திற்கும் சென்று தரிசனம் செய்வது இல்லை. உலகில் எல்லா நாடுகளிலும் மலை, அருவி, ஆறுகள், கடல், கோயில்கள் உண்டு. ஆனால் நம் நாடு போல் புனிதம், தெய்வீகம் அங்கு இல்லை. சிவகவசமாகிய உலகில் நம் பாரம்பரியம் அழியாத பக்திமார்கத்தையும், பக்த கோடிகளையும், சிவனடியார்களையும், பாதுகாப்பது நம் கடமை, சிவகவசமாகிய ருத்திராட்சையும், மாடர்ன் மாலையாக கம்மல், நெக்லஸாக மாறி வருகிறது. மாறி வரும் உலகில் சத்தமாக சினிமா பாடலை பாடும் மனிதன், சத்தமாக இறைநாமம் சொல்ல யோசிக்காறான். எங்கு நோக்கினும் இறைநாமம் கேட்க, துஷ்டமான சொல்லுக்கே இடம் இல்லை. நம் நாடு மட்டுமே புனித பூமி, கர்ம பூமி, யோக பூமி, கர்ப்பக பூமி, தெய்வீக பூமி, ஆன்மீக பூமி, என்று உலகப் பார்வையில் புகழப்படுகிறது. பல மஹான்கள், ஞானிகள், தெய்வீக சித்தர்கள், இறைதூதர்கள் பிறந்த யோக பூமி. இப்பூமியில் பூறப்பதே அரிது, என்கிறார்கள் பெரியோர்கள். இந்த பூமியில் பாவம் போக்கும் கயிலைவிட புனிதமானது அருணாச்சலமே. ஏனென்றால் கயிலையில் தரிசனம் மட்டுமே, அதுவும் ஆறுமாதங்கள் மட்டுமே. ஆனால் திருவண்ணாமலையை நிலைத்தாலே முக்தி.

உலகில் மக்கள் இந்த மஹா தெய்வீக பூமியை, கண்டும், படித்தும், பிறருக்கு சொல்லியும் பயன் பெறவே இப்புத்தகம் தரப்படுகிறது. ரகசியம் அல்ல செவி வழி செய்தியை பிறர்க்கு நாம் தெரியப்படுத்த வேண்டும். இதை படிக்கும் அன்பர்கள் இறைவன் புகழ் பரவ செய்யுங்கள். மற்றவர்கள் புண்ணிய பூமியை அறிந்து இறை தரிசனம் பெறவும், நீங்கள் செய்தியைப் பரப்புங்கள். இயற்கை படைத்த திரு உருவான ஈசன் மலையாக படுத்த நிலையை பார்த்தும் கேட்டும் புண்ணியம் பெறட்டும். இதில் படித்த்தை பிறர்க்கு விளக்கமாக, பொறுமையாக, தெய்வீகமாக கூறுங்கள்.

திருவண்ணாமலை மனிதனின் வாழ்வில் கடைநிலை இருந்து மீட்கும் ரகசிய உபகாரம் உட்நோக்கி பாருங்கள். உண்மையுள் உண்மை விளங்கும்,

திருவண்ணாமலையே கயிலை

1. ஓம் நமச்சிவாய என்று ஐந்தாகி
எழுந்த மலை திருவண்ணாமலை

2. உலக ஆன்மீக தியான திறவுகோல்
திருவண்ணாமலை

3. உலகு எங்கிலும் காணாத ஒரே
திவ்யச் சொரூப ரூபம் திருவண்ணாமலை

4. ஒரே நள்ளிரவில் ஆன்மீகம்
விழித்தெழும் மலை திருவண்ணாமலை

5. ஆன்மீகத்தோடு ஆடி, பாடி, பரவசம் அடையும்
கிரிமலை திருவண்ணாமலை

6.சித்தர்கள் 18 பேரும் மெய்யில்
எட்டிய மலை திருவண்ணாமலை

7. பக்தர்கள் எரும்பு போல் சாரை சாரையாய்
செல்லும் மலை திருவண்ணாமலை

8. பக்தி பரவசத்தால் சரண் அடையும்
ஆலையம் திருவண்ணாமலை

9. திகைக்கின்றதொரு மனம்
திளைக்கின்ற மெய்யும் நின்ற மலை திருவண்ணாமலை

10. இறைவன் பாத தரிசனம் தரும் மலை திருவண்ணாமலை

11. மெய் கண்ட யோகியரை கடைநிலை விண்ட செய்த
மலை திருவண்ணாமலை

12. சன்னியாசி முதல் ஞானி வரை யாசிக்கும்
மலை திருவண்ணாமலை

13. ஆதியும், அந்தமும் ஆகிய திருமுடி
காண முடியாத மலை திருவண்ணாமலை

14.திருமறை நான்கையும் தன்னுள் கொண்ட மலை
திருவண்ணாமலை

15. எல்லா ஜீவராசிகளும் படி அளக்கும்
ஈசன் மலை திருவண்ணாமலை

16. மனிதனுக்கு அன்னமுது படைக்க
இறைவி உயிர் கொண்டு வந்த மலை திருவண்ணாமலை

17.அக்னிதலமாகிய இறைவன்
ஜீவனில் சுடர்விடும் மலை திருவண்ணாமலை

18. ஒரே நாளில் பலகோடி இறை நாமம்
பிரதிபலிக்கும் மலை திருவண்ணாமலை

19. பிறப்பில்லா முக்தி தந்து முடிவில்லாதவனிடம்
முக்திபதம் சேர்க்கும் மலை திருவண்ணாமலை

20. தனிமலை ஐந்தும் பிரிந்து சேர்ந்து
பஞ்சபூதமாய் காட்சி தரும் மலை திருவண்ணாமலை

21. பௌர்ணமியில் ஒன்று திரண்டு
சயனக்காட்சி தரும் மலை திருவண்ணாமலை

22. ஆன்மீக பூமியின் இதயமாகி
ஆத்ம தரிசனம் தரும் மலை திருவண்ணாமலை

23. எந்த கோயிலிலும் சென்று வணங்கினால் பலன்.
நினைத்த இடத்தில் நினைத்ததும் முக்தி தரும் மலை திருவண்ணாமலை

24. நந்தியும் மலையாக அமர்ந்த மலை
திருவண்ணாமலை

25.குருவானவர் திருஉருவாக உறங்கும்
மலை திருவண்ணாமலை

26.இறைவனை யாசித்து, பின் பூஜித்து, விண்டு மகான்கள்,
லிங்கமாக பல புதையுண்ட இடம் திருவண்ணாமலை

27. மனித மனம் மலராக மலர்ந்து
தெய்வீக மணம் வீசும் மலை திருவண்ணாமலை

28. ஆன்மீக சொர்க்கத்தின் திறவு கோலாகிய
தியானம் கைக்கூடும் மையம் திருவண்ணாமலை

29. நந்தினி மூலிகையே மலையாய், மாமருந்தாய்
அமைந்த மலை திருவண்ணாமலை

30. வேந்தன் முதல் மாந்தர் வரை இல்லறம்
துறந்து நல்லறம் புகுந்த மலை திருவண்ணாமலை

31. செய்கடன் பணி செய்து இல்லறம் முடித்து
முக்தி காண செல்லும் மலை திருவண்ணாமலை

32. ஜோதிலிங்க உருக்காட்சி அடிமுடி
தேடிய மலை திருவண்ணாமலை

33.சுந்தரேஸ்வரனே அரூபமாய், சுயம்புவாய்,
ஜோதியாய் வந்த மலை திருவண்ணாமலை

34.ஆன்மீக மனக்கண் திறக்கும்
திறந்த வெளியே திருவண்ணாமலை

35. கிருபைக் கடலான அருணாச்சலம்
உரு கொண்ட மலை திருவண்ணாமலை

36. தட்ஷிணக் கயிலாயமாக திகழும் மலை
திருவண்ணாமலை

37. அருணாச்சலேஸ்வரர் ஜோதிலிங்கமாக
காக்கும் மலை திருவண்ணாமலை

38. தென்பகுதி கயிலாயமாக ஈசன்
மஹா விழிப்புடன் இருக்கும் மலை திருவண்ணாமலை

39. உத்திர கயிலாயத்தை விட தொன்மையான
மலை திருவண்ணாமலை

40. மலையே சிவமலையாக படிந்த மலை
திருவண்ணாமலை

41. அருணைபுரி, அருணாத்திரி, சோனகிரி
சோணாச்சலம் பெயர் கொண்ட மலை திருவண்ணாமலை

42. கந்த புராணம் போற்றும் மலை
திருவண்ணாமலை

43. சிவபுராணம் பெருமை ஏற்ற ஸ்தலம்
திருவண்ணாமலை

44. அருணாச்சல மஹாத்மியம் பிறந்த மலை
திருவண்ணாமலை

45. சிவன்அரணாக இருந்து ஜீவ ஆத்மாவில்
பரமாத்மாவிற்கு வழி காட்டும் மலை திருவண்ணாமலை

46. முக்தி, பக்தி, தரும் தலத்தில்
முதன்மை பெற்ற இடம் திருவண்ணாமலை

47. ஞானம் சித்திக்கும் மலை
திருவண்ணாமலை

48. ஞான சித்தர்களின் தபம் கூடிய மலை
திருவண்ணாமலை

49. அஷ்டயோக காந்தங்களை வெளிவிட்டுக்
கொண்டிருக்கும் மலை திருவண்ணாமலை

50. சிவயோகம் அனுஷ்டிக்கும்
சிவம் மிளிரும் மலை திருவண்ணாமலை

51.மும் மலங்களை வேர் அறுக்கும் மலை
திருவண்ணாமலை

52.உலக மூலமான பிரம்மம் உறங்கும் மலை
திருவண்ணாமலை

53. சிவ சொரூபமாகி நம்மை மோட்சம்
அழைத்து செல்லும் மலை திருவண்ணாமலை

54. பஞ்ச இயந்திரங்கள் ஒரு மித்து அடங்கும்
மலை திருவண்ணாமலை

55. சிவ ஞான பழம் ஆக்கும் மலை
திருவண்ணாமலை

56. நந்தி தேவர் மார்கண்டேய மகரிஷிக்கு
திருவாய் மலர்ந்தருளிய மலை திருவண்ணாமலை

57. பெண்ணுக்கு முதலில் சரிபாதி தந்த
அர்த்த நாரியின் மலை திருவண்ணாமலை

58.பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் பணிந்து
வணங்கும் மலை திருவண்ணாமலை

59. தேஜஸ் ரூபமான ரூபன் உறங்கும் மலை
திருவண்ணாமலை

60.திரிநேத்ரம் உள்ள ஈசன் ஆண்ட மலை
திருவண்ணாமலை

61. பிறப்பு அறுக்க வந்தவனின் மலை
திருவண்ணாமலை

62.பிறவித்துன்பம் நீக்கும் மலை
திருவண்ணாமலை

63.ஈசன் பாதவிந்தம் சரண் அடையச் செய்யும்
மலை திருவண்ணாமலை

64. அஷ்ட பாலகர்கள் எட்டுதிக்கும்
லிங்க பூஜை செய்த மலை திருவண்ணாமலை

65. அக்னி லிங்கம் அக்னி தீர்த்தம்,
அக்னி பாகமாக பூஜித்த மலை திருவண்ணாமலை

66. நிருதி லிங்கம் வருணன் பூஜித்த மலை
திருவண்ணாமலை

67. சூரிய லிங்கம் சூரிய பூஜை செய்த மலை
திருவண்ணாமலை

68. வாயு லிங்கம் வாயு பகவான் பூஜித்து
பூமிக்கு வந்த மலை திருவண்ணாமலை

69. குபேர லிங்கம் குபேரன் பூஜித்து
தொழுத இடம் திருவண்ணாமலை

70. ஓங்கார ஓசை கணன்றுக் கொண்டிருக்கும்
மலை திருவண்ணாமலை

71.சச்சிதானத்தம் எங்கும் ஒளியாகும்
மலை திருவண்ணாமலை

72. உலக மாயை அறுக்க தவயோக
நிலை தரும் மலை திருவண்ணாமலை

73.சிவம் சித்தித்து சித்தர் ஆக்கும் மலை
திருவண்ணாமலை

74.நீசனும் ஈசனை நோக்கின் ஈசன்
அவன் நேசன் என்னும் மொழி பிறந்த மலை திருவண்ணாமலை

75. ஈசான யோகம் பயிற்றுவிக்கும் இடம்
திருவண்ணாமலை

76.வாசி யோகம் பயில ஏற்ற
சஞ்சீவீ மலை திருவண்ணாமலை

77.ஜீவனை சிவமாக்கும் திரு தலம்
திருவண்ணாமலை

78. அட்டமா சித்திகளை தரவல்ல மலை
திருவண்ணாமலை

79.அமிர்த தரனை பொழியும் மலை
திருவண்ணாமலை

80. பிரம்ம மந்திரம் பிரகாசிக்கும் மலை
திருவண்ணாமலை

81.மனிதனின் பிரம்ம மந்திர மூலக்கனல்
எழுப்பிவிடும் மலை திருவண்ணாமலை

82. கோடி கோடி தவமுனிவர்கள்
முக்தி விண்ட மலை திருவண்ணாமலை

83. பாவம் போக்கும் பல தீர்த்த சுனை
கொண்ட மலை திருவண்ணாமலை

84. புனித ஜல கௌரி தேக்க நீர்நிலைக்
கொண்ட மலை திருவண்ணாமலை

85.ஓம் என்னும் மன நாதம்
ஒலிக்கும் மலை திருவண்ணாமலை

86.சுழிமுனை நாடியை தெளிய வைத்து
தெரிய வைக்கும் மலை திருவண்ணாமலை

87. சித்தர்கள் மலை சாரலில் தவம்
செய்ய ஏற்ற மலை திருவண்ணாமலை

88. எது கேட்பினும் கிடைக்கும் மலை
திருவண்ணாமலை

89. சமாதி கிரியை பயிற்றுவிக்கும் மலை
திருவண்ணாமலை

90. ஜீவராசியின் ஜீவனாகிய சிவன்
உறங்கும் மலை திருவண்ணாமலை

91. கர்ப்பகிரகமாகிய மூலஸ்தானத்தில் இறைவன்
ஜோதியாய் எழும்பும் மலை திருவண்ணாமலை

92. மூலாதாரப் பரணி தீபம் ஏற்றும்
மலை திருவண்ணாமலை

93. சகஸ்ர ஸ்தலமாகிய உச்சி குழி
திறந்து தியானம் ஏற்றும் மலை திருவண்ணாமலை

94. பூமியின் நடுப்பகுதியே
திருவண்ணாமலை

95. பூமியின் இருதயமே
திருவண்ணாமலை

96.பூமி தேவி தோன்றிய மலை
திருவண்ணாமலை

97. பிரம்ம தண்டத்தை இயக்கிவிடும் மலை
திருவண்ணாமலை

98. வெள்ளாள மஹாராஜனே கோயில்கட்டி
தொழுத மலை திருவண்ணாமலை

99. ஈசனே குழந்தையாய் அவதரித்த
மலை திருவண்ணாமலை

100. வள்ள மஹாராஜனுக்கு ஈசனே
ஈமகிரியை செய்யும் மலை திருவண்ணாமலை

101. தேவி இடபாகம் பெற்ற மலை
திருவண்ணாமலை

102. கார்த்திகை தீபம் ஏற்றும் மலை
திருவண்ணாமலை

103. மன்னர், சித்த புருஷர்கள்
திக் விஜயம் செய்த மலை திருவண்ணாமலை

104. அருணாச்சல மகாத்மியம் போற்றும் மலை
திருவண்ணாமலை

105.வாசியோகம் வசப்படும் மலை
திருவண்ணாமலை

106. உள்முக பயணத்திற்கு ஏற்ற மலை
திருவண்ணாமலை

107. மௌனப் பொருள் உறங்கும் மலை
திருவண்ணாமலை

108. மௌனத்தின் மந்திரமாகிய மலை
திருவண்ணாமலை

109.உள் ஒலி எழுப்பும் மலை
திருவண்ணாமலை

110.ஜீவாத்துமா பரமாத்துமாவுடன் கலக்க
ஈர்க்கும் மலை திருவண்ணாமலை

111.பெருமை தாங்கிய ஆயிரம் நாக்குடைய
ஆதிசேஷனாலும் விளக்க முடியாத மலை திருவண்ணாமலை

112. பல்லாண்டு காலமாக முக்திக்கு
தேடி வரும் புனித மலை திருவண்ணாமலை

113. தொன்மையிலும் முதன்மை மலை
திருவண்ணாமலை

114. பூகோளத்தின் நீர் தோன்றும் முன்
தோன்றிய மலை திருவண்ணாமலை

115. பல கோடி ஆண்டு முன் நீரில்
மிதந்த மலை திருவண்ணாமலை (வாய் வழி செய்தி)

116. சிவனார் மலையின் சிறந்த மலை
திருப்பொருள் விளங்கும் மலை திருவண்ணாமலை

117. ஆதி அந்தம் அறிய முடியாத
ஜோதி அனல் பிறந்த மலை திருவண்ணாமலை

118. சிவ வாக்கு பிறந்த மலை
திருவண்ணாமலை

119. சிவன் சொல்லான வாக்கு ஆத்மஜோதி அருணாச்சலத்தின் இதயத்திலே
விளங்குகிறது என்று தியானி - சிவ பெருமான் வாக்கு தந்த மலை
திருவண்ணாமலை

120.இயற்கையே திருவுக்கு சிறப்பு சேர்த்த மலை
திருவண்ணாமலை

121. மனம் கொண்ட மனிதர்கள்
சுழன்று வரும் மலை திருவண்ணாமலை

122. நெருப்பு மலை, நெருங்க முடியாத மலை
திருவண்ணாமலை

123.ஜோதி மலை, ஜோதிர் மலை
திருவண்ணாமலை

124. கிரேதாயுகத்தில் அக்னிமலை
திருவண்ணாமலை

125. திரேதாயுதத்தில் மாணிக்க மலை
திருவண்ணாமலை

126.துவாரகாயுகத்தில் பொன்மலை
திருவண்ணாமலை

127.கலியுகத்தில் கல் மலை
திருவண்ணாமலை

128. மக்கள் கடல் அலையாக
இறை நிலையில் தவழ்ந்து போகும் மலை திருவண்ணாமலை

129.அருணம் - சிவப்பு, கிரி மலை
திருவண்ணாமலை

130. நெருப்பு கோளமாக இருந்த மலை
திருவண்ணாமலை

131. இயற்கை சிவ வடிவமாக வான் பார்த்து
படுத்த நிலையில் உள்ள மலை திருவண்ணாமலை

132. கிரிவலத்தால் சிறப்பு வாய்ந்த மலை
திருவண்ணாமலை

133.சித்ரா பௌர்ணமியில் இறை அருள் மிளிரும் மலை
திருவண்ணாமலை

134. ஆன்மீக தவயோகிகள், ஞானிகள் தவசீலர்கள்
கர்ம வினை அறுத்து ஈர்க்கும் மலை திருவண்ணாமலை

135.வினையின் வினைப்பயனை அறுக்கும்
மலை திருவண்ணாமலை

136.விதியின் விதிப் பலனை மாற்றும்
மலை திருவண்ணாமலை

137. ஈசனவன் அழைப்பு இல்லாமல் செல்ல முடியாத
மலை திருவண்ணாமலை

138. நீ ஏங்கி நோக்க அழைக்கும் மலை
திருவண்ணாமலை

139. ஒவ்வொரு யுகமும் குருவாக எழுந்தருளி
வழி நடத்தும் மலை திருவண்ணாமலை

140. மூலாதாரத்தில் கனல் மூண்டு
ஜோதிக் கனல் மூட்டும் மலை திருவண்ணாமலை

141. குண்டலினி விழிக்கும் மலை
திருவண்ணாமலை

142.மூலாதாரம் தெம்பேறும் மலை
திருவண்ணாமலை

143. சகஸ்ர தேர் இழுக்க தண்டுவடம்
துணை பயக்கும் மலை

144.பார்வதி சிவபெருமானை நோக்கி சுவாமி கயிலாயத்தைவிட மகிமை வாய்ந்த
இடம் உண்டா என வினவ கயிலைக்கும் மேன்மையான மலை உண்டு அது
திருவண்ணாமலை

145. இறைவன் திருமொழி அருள் தந்த மலை
திருவண்ணாமலை

146.பொல்லாத பாவம் போக்கும் மலை
திருவண்ணாமலை

147.ஈடு இணை இல்லா மலை
திருவண்ணாமலை

148. அப்பன் திருவண்ணாமலை, தாய் உண்ணாமலையாக
அருள் தரும் மலை திருவண்ணாமலை

149. பல்லுயிரில் முக்தி தந்து, பல்லுயிருக்கும் படி அளக்கும் தெய்வம்,
பல்லுயிரில் அவனைக்காண்பவருக்கு மனதில் எழுந்தருளும் ஈசன் மலை
திருவண்ணாமலை

150. ஆணவம், கர்மம், மாயை என்னும்
மும்மலம் ஒழியும் மலை திருவண்ணாமலை

151.அருந்தவம் ஏற்றோர்க்கு மாயோன
மனதில் எழுந்தருளும் மலை திருவண்ணாமலை

152. கல் மலையே மாயோன் உரு காட்டும் மலை
திருவண்ணாமலை

153. மெய், கண், மூக்கு, செவி, வாய் இப்பஞ்சயிந்திரயம்
அடக்கி ஆள, ஸ்திரன் கற்கும் ஆரம்ப பள்ளி திருவண்ணாமலை

154. தியான சமாதி கற்கும் முதுநிலைப்பள்ளி
திருவண்ணாமலை

155. யோகியருக்கு யோக நிலையும்
போகியருக்கு போக நிலையும் ஈசன் தரும் மலை திருவண்ணாமலை

156.எண்ணத்திற்கு ஏற்றபடி
படி அளப்பவன் வாழும் மலை திருவண்ணாமலை

157. மூலிகையாய் பல பிணிதீர்க்கும்
கர்ப்பகக்கனி இறை மலை திருவண்ணாமலை

158.மெய்சிலிர்த்து மனம் அடங்கும்
மாமலையில் மருந்து மலை திருவண்ணாமலை

159. காதல் கொண்டு கசிந்துருகுவோர்க்கு
வேண்டும் வரம் தரும் மலை திருவண்ணாமலை

160.பராபரனை சுற்றி கங்கையே
தீர்த்தங்களாய் உள்ள மலை திருவண்ணாமலை

161. ரிஷபவாகனத்தில் எழுந்தருளும் தயாபரன்
தன்னை தரும் மலை திருவண்ணாமலை

162. வந்தவர், வணங்குபவர் எல்லோருக்கும்
பிறவி துன்பம் தன்னால் விலகும் மலை திருவண்ணாமலை

163. கிழக்கில் இந்திர தீர்த்தம்
தென் கிழக்கில் அக்கினி தீர்த்தம் கொண்ட மலை திருவண்ணாமலை

164.தெற்கில் யம தீர்த்தம்
நிருத்திரமூலையில் நிருதி தீர்த்தம் கொண்ட மலை திருவண்ணாமலை

165. மேற்கில் வருண தீர்த்தம்
ஈசானத்தில் அஸ்வினி தீர்த்தம் கொண்ட மலை திருவண்ணாமலை

166.தென்பாகம் சோனை நதியிலும், இறை தீர்த்தத்திலும்
ஸ்நானம் செய்து முறையாக கிரிவலம் வர நன்மை உண்டாகும்
மலை தீர்த்தம் கொண்ட மலை திருவண்ணாமலை

167. அஷ்ட லிங்கம் தரிசனம் செய்ய
ஆத்தும விளக்கம் பெறச்செய்யும் மலை தீர்த்தம் கொண்ட மலை திருவண்ணாமலை

168. நான்கு லிங்க மேடை கைமாற்றிப் பார்க்க
இறைவன் நிலவில் தெளிவாகும் மலை தீர்த்தம் கொண்ட மலை திருவண்ணாமலை

169. கைமாறி தொட்டு காண்பவர்க்கு முழுபலனும்
தரும் மலை திருவண்ணாமலை

170. உட்கார்ந்து உள்முகம் பார்க்க உன்னுள்ளே இருப்பேன்
உயிர்மூச்சாக நான் - என்று இறைவன் உரைத்த மலை திருவண்ணாமலை

171. உலக மாயை அருக்க வல்ல
அநாதி மலை திருவண்ணாமலை

172. மனம் திறக்க பிரம்மத்தை காட்டும் மலை
திருவண்ணாமலை

173. மதம், மொழி, இனம் கடந்து எல்லோரும்
எல்லாமாக தரிசிக்கும் மலை திருவண்ணாமலை

174. மதமொழி சேராது இருக்கும்
மௌன மலை திருவண்ணாமலை

175. ஞான மழை பொழியும் மலை
திருவண்ணாமலை

176. பல கோடி சித்தர்கள் தாங்கள் வழிபட்ட
லிங்கத்துடன் சமாதியாகிய மலை திருவண்ணாமலை

177. இரண்டு காத தூரம் பிறப்போர்க்கு பூதகணங்களாக
கயிலையில் பிறக்க வைக்கும் மலை திருவண்ணாமலை

178. இரண்டு காத தூரம் நானே குருவாக ஒவ்வொரு காலத்திலும் அவதரிப்பேன்
என்று நந்தி வாக்கு தந்த இடம் திருவண்ணாமலை

179. ஓம் சிவ சிவாய என்னும் நாமம் எண்ண முடியாத
அளவு சுழலும் மலை திருவண்ணாமலை

180. பூமியிலுள்ள சிவத்தலங்களில் முதன்மை
வாய்ந்த தலம் உள்ள மலை திருவண்ணாமலை

181. பெரிய கோயில் கோபுரம், சிறப்பு
கலை நேத்திரம் கொண்ட மலை திருவண்ணாமலை

182. ஐந்து நந்தீஸ்வர பிரகாரஸ்தலம்
கொண்ட மலை திருவண்ணாமலை

183. இருபத்தைந்து ஏக்கர் பரந்து விரிந்தும் விஸ்வரூப
இயற்கை மலை அமைந்த இடம் திருவண்ணாமலை

184. சிற்ப விதிகள், ஆகம விதி, பூமி சாஸ்திரம்
எல்லாம் விஸ்வ சொரூபமாக அமைந்த மலை திருவண்ணாமலை

185. ஆயிரம் கால் மண்டபம், கல் தூண் வரிசை
காணர்க்கறிய கல் அடுக்கு முறைக்கு பெயர் பெற்ற தலம் திருவண்ணாமலை

186. பல பெரியத் திருக்குளங்கள் கற்களால்
பாதுகாக்கப்பட்ட ஸ்தலம் திருவண்ணாமலை

187. சிவ சொரூபமாக முருகக் கடவுள் அருணகிரிநாதருக்கு
காட்சி தந்த மலை திருவண்ணாமலை

188. சர்வ சித்தி விநாயகராக சிவ சொரூபம்
காட்சி தரும் மலை திருவண்ணாமலை

189. ஆழம் காண முடியாத அருண சமுத்திரம்
என்று அழைக்கப்படும் மலை திருவண்ணாமலை

190. பெரிய நந்தவனம் பூஜை பூக்கள் கொண்ட
சிவஸ்தலம் திருவண்ணாமலை

191. பிரம்ம லிங்கம் என்னும் சதுர்முக லிங்கமும்,
பஞ்சமுக லிங்கமும் கொண்ட மலை திருவண்ணாமலை

192. சிவ ஸ்தலத்தில் பிடாரி அம்மன் முதன்மை
வாய்ந்த இடம் திருவண்ணாமலை

193. சிதம்பரேஸ்வரர், சம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர்
வரிசையாக உள்ள இடம் திருவண்ணாமலை

194. ஏகாம்பரேஸ்வரர், லிங்க்கோத்பவமூர்த்தி
இருநிலை கொண்ட இடம் திருவண்ணாமலை

195. பிரம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி,
இந்திராணி, சாமூண்டி அஷ்டபூஜ பிடாரி காட்சி தரும் இடம் திருவண்ணாமலை

196. கற்சூலம் கொண்ட கோயிலுடன் எழுந்த
சிவ வில்வம் கொண்ட மலை திருவண்ணாமலை

197. தீவினையை துலாம் செய்யும் சித்திரகுப்தன்
கோயில் கொண்ட தலம் திருவண்ணாமலை

198. அஷ்ட பந்தம் அல்லாது சொர்ணபந்தத்தால்
உண்ணாமலை பிரதிஷ்டை செய்த கோயில் திருவண்ணாமலை

199. சொந்தம், பந்தம் அருத்தவர்க்கு சொந்தமானவன்
இருக்கும் இடம் திருவண்ணாமலை

200. மனதைத் தொலைத்தவன் தேடி கிடைத்த இடம்
திருவண்ணாமலை

201. உன்னில் உன்னைப் பார்க்க வைக்கும் இடம்
திருவண்ணாமலை

202. பரம ரகசியத்தை ரகசியமாக அறியும் இடம்
திருவண்ணாமலை

203. உள் பயணத்தில் உன்னை மறக்கச் செய்யும்
இடம் திருவண்ணாமலை

204. மதம், சாதி, கொள்கை விட்டவன் சிவனாகும்
இடம் திருவண்ணாமலை

205. உங்கள் பயணத்திற்கு பொதி குறைத்து
அகப்பணத்திற்கு பக்குவப்படுத்தும் இடம் திருவண்ணாமலை

206. பற்று அருத்தவன் பரம் பொருளானைக்
கண்ட இடம் திருவண்ணாமலை

207. உண்டருசி கண்டவனால் அறிய முடியாது
உண்டருசி உண்டவன் அறியும் இடம் திருவண்ணாமலை

208. எல்லாம் துளைத்து இல்லாததைப் பெறும் இடம்
திருவண்ணாமலை

209. தெரியாத, தெரிந்த, தெளியாத மனம் தெளியும்
இடம் திருவண்ணாமலை

210. அறிந்தவன் விலகாத இடம்
திருவண்ணாமலை

211. சொல்ல முடியாத, எண்ண முடியாத விளக்கம்
உறைந்த இடம் திருவண்ணாமலை

212. எதுவும் இல்லாமல் எதுவும் பெறும் இடம்
திருவண்ணாமலை

213. மனம் நின்ற இடத்தில் அவன் இருந்தான்,
மனம் நில்லா இடத்தில் அவன் இல்லை, என்று
உணர்த்தும் இடம் திருவண்ணாமலை

214. விருட்சம் உறங்கிய விதை விதிப்படி
விழிக்கும் இடம் திருவண்ணாமலை

215. மற்றது எல்லாம் மாற்றாகி தன்னுள்
ஒழியும் இடம் திருவண்ணாமலை

216. உயிர்பித்தவனிடம் மனச்சரணம் சமர்பிக்கும்
இடம் திருவண்ணாமலை

217. மாயைத் திரை அறுத்து மனத்திரைப்
போடும் இடம் திருவண்ணாமலை

218. அடங்காதவை அடங்கி ஆருயிர் பிரித்து
வெற்றி கொள்ளும் இடம் திருவண்ணாமலை

219. நம்பிக்கை இல்லாதவன் நம்ப முடியாது
உள் இருப்பவன் விழித்திருக்கும் இடம் திருவண்ணாமலை

220. நல்லவை நல்லவையாக எண்ணச் செய்தவன்
நல்லவையாக உறைந்தவன் விரும்பும் இடம் திருவண்ணாமலை

221. சூனியத்தை சூனியமாக அறியும் இடம்
திருவண்ணாமலை

222. சொல்லில் அடங்குபவன் சொல்லாமல்
வெளிப்படும் இடம் திருவண்ணாமலை

223. ஆண்டவனால் சந்தேகப்பட்டவனுக்கு சாக்காடு
ஆண்டவனால் சந்தோஷப்பட்டவனுக்கு வேறுபாடு
உணர்த்தும் இடம் திருவண்ணாமலை

224. தன்னை உணர்ந்தவனை
தன்னிடம் ஈர்க்கும் இடம் திருவண்ணாமலை

225. வந்த இடம் அறிந்தவன், சொல்லும் இடம்
அறிவிக்கும் அறிவின் அறிவிப்பாளன் இடம் திருவண்ணாமலை

226. அருணாசலத்தை வணங்கினால்
நரை, திரை, மூப்பு சாக்காடு வெல்லும் இடம் திருவண்ணாமலை

227. சிவனார் மலை மூலிகையில் மண்ணும்
பொன்னாகும் இடம் திருவண்ணாமலை

228. சிவனார் மலையில் பல சித்தர்கள் சித்து வேலையும்
சிவ சேவையும் செய்த இடம் திருவண்ணாமலை

229.பஞ்சாசர மந்திர எழுத்துக்கு ஒப்பான நாமம்
திருவண்ணாமலை

230. கடலில் மூழ்கிப் போன லெமூரியக்கண்டத்தின்
எஞ்சிய பாகம் அருணாச்சலம் என்று பெயர் கொண்ட மலை திருவண்ணாமலை

231. மலையை சுற்றி மயானம் அமைத்து கபாலமாலையை
பூமாலையாய் கொண்ட மலை திருவண்ணாமலை

232. பாத அணி படக்கூடாத மலை
திருவண்ணாமலை

தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
தொடரும்...
நிகழ்வுகள்
தியானேஸ்வர் நித்திய காரி    பூஜை விவரம்.

திங்கள் -         திரு. K. ராஜா அவர்கள்
செவ்வாய் -    திரு. C. ரமேஷ் (C.C. பில்டர்) அவர்கள்
 

ஞாயிறு -        திரு. குமரேசன் அவர்கள்
                          திரு. P. ராஜேந்திரன்
(Heigh way )  அவர்கள்
கோவில்   பராமிப்பு   மேற்பார்வை
திருமதி சாந்தி - கஜேந்திரன்.கைலாய வாத்திய குழு நடத்துனர் : சிவதாஸ் அவர்கள்
(செல் ; 9444813781) 
 : சுனிதா - பாபு அவர்கள்
( செல் : 0942541759)
உழவாரப் பணிக்குழு நடத்துனர் : திருமதி . சுனிதா - பாபு அவர்கள்
(செல் : 0942541759)
Designed & Maintained by : Thiyaneswar Peedam Charitable Trust  by Dzine Corner Mr. Janardan
 

go back to the top