Arunachaleshwarar
தியானம்

ஓம் பரி பூரணத்துவ மாதா
ஓம் பரி பூரணத்துவ பிதா
ஓம் பரி பூரணத்துவ குரு
ஓம் பரி பூரணத்துவ தியானேஸ்வர்


தியானம் வேண்டுபவர்கள் நல் அமைதியை பெறுவார்கள். தியானத்தால் மட்டுமே உங்கள் குணமாற்றம் நிகழச்செய்ய முடியும.

தியானத்தால் மஹாசக்தியை பெறமுடியும் என்பது உண்மை. ஆனால் நற்குணம் மட்டுமே தியானத்தின் மூலதனமாகும். தியானத்தால் நல் சக்தியை ஒவ்வொருவரும் அடைய முடியும். தியானத்தால் ஒருவர் மாறும்போது (தலைவன் அல்லர் தலைவி) குடும்பமே அமைதியை, அன்பை அனுபவிப்பர். ஒருவரது அமைதி அவரை சார்ந்தவரும் அனுபவிப்பர்.

தியானத்தால் ஒருவர் மாறினால் குடும்பத்தின் அனைவரிடமும் மாற்றம் ஏற்படும்.

தியானத்தால் ஒரு குடும்பம் மாறும்போது நாடே மாறும். ஒரு நாட்டின் அமைதி என்பது ஒரு தனிமனிதனின் அமைதியை சாரும். இதனையே பாரதியார் 'தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார்.
தியானம் ஒவ்வொருவருக்கும் மனம், மொழி, இனம், பேதம் அற்ற மனநிலையைத் தரும். தியானத்தால் மட்டுமே உலகையும், உலகின் உயிர்களையும் காக்கமுடியும்.

தியானம் ஒரு அற்புதமான நிலையை உணர்த்தும் வழி. உடல், மனம், இரண்டிற்கும் ஆரோக்கியம் தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்லெண்ணம் உதிக்கும். நல்லெண்ணத்தில் நற்செயல் நடக்கும். நற்செயலில் தான் நல்ல மனிதன் பிறக்கிறான். நல்ல மனிதனில் அமைதியான ஆனந்தம் இருக்கும். அமைதியான ஆனந்தம் நமக்கும், வாழ்க்கைக்கும், வீட்டிற்கும் நாட்டிற்கும் தேவையே.

அமைதியில் அன்பு மாறுவது இல்லை. அன்பில்தான் கருணைப் பிறக்கும். கருணைப் பிறந்தால் நாடே வாழ்வு பெறும். ஓவ்வொரு தனி தனிமனிதனின் மாற்றமும் நாட்டின் உயர்வுக்கு காரணம் ஆகும். ஆதனால் ஒவ்வொரு மனிதனும் தியானத்தால் நல்மனிதர்களாக உருவாகுங்கள்.

 

அன்பில் மலர்வதே தியானம்

 

இறைவன் அன்பு மயமானவர். இறைவனின் அன்பில் மலர்ந்ததே உலகமும், உலக உயிர்களும். இறைவனின் கருணையை பெறுவதே தியான மகிமையாகும். மெய்யில் அன்பும், கருணையும் கலந்த மஹா மூலசக்தியே இறைவன். அந்த இறைவனை அடைவதற்கான வழியே தியானம் ஆகும். இறைவனை சுத்த எண்ணத்தால் மட்டுமே அடைய முடியும். இந்த சுத்த எண்ணத்தை தருவது தியானம். சுத்த எண்ணத்தின் செயல் சுத்தமான மெய் வெளிப்பாடாகவே இருக்கும். இந்த சுத்த செயலுக்கு நீஷ;டமோ கஷ;டமோ இல்லை. இந்த சுத்த சிந்தனையைப் பெற்று தருவது தியானம். உலகில் மெய்பொருள் கலந்து உள்ளது. மெய்பொருளை அறிய வேண்டின் தியானம் அவசியமாகும். இந்த மெய்பொருளை பொய் பொருள் மூடி மறைத்தும், பாதுகாத்தும் வருகிறது.


இந்த உலக மாயை என்னும் பொய் பொருளை விலக்கி மெய்பொருளைக் காணச் செய்வது தியானம். தியானம் அறிவு தாண்டிய, சிந்தனை அற்ற திறன் வாய்ந்த சக்தியாகும். சிந்திக்காத செயல் ஆற்றலை பெறுவதே தியான மகிமையாகும். உங்கள் செயலை பழுதே இல்லாது காக்கும் கவசம் தியானம் ஆகும். ஒரு சத்தியத்தை அடைய சக்தியாக மாறும் சக்தி தியானம்.


தியானம் அறிவைத் தாண்டிய ஞானம் ஆகும். நம்மையும், நமக்காக படைத்தவைகளையும், படைத்தவனையும் ஞாபகம் வைத்து செயல்படுவதே ஞானம். இந்த ஞானத் தெளிவை தருவது தியானம். துpயானப் பெட்டகத்தில் இல்லாத பொக்கிஷமே இல்லை. உங்கள் தேவை அறிந்து, செயலை திறம்படச் செய்வது தியானத்தின் செயல் ஆகும். தியானம் ஒருவனை முழு மனிதனாக்கும். முழுமனிதன் அறிவின் நீதிமானாகவும், அன்பு, கருணை நிறைந்த கூட்டத்தோடு வாழ்வான். ஆரோக்கியமான மனதினால் தான் உடல் மற்றும் உலக விஷயங்களை அனுபவிக்க முடியும். ஆரோக்கியமான மனம், உடல் இல்லை என்றால் பணம், புகழ், பதவி, மண், பொன், பெண், எல்லாம் வீணே.

 

இறைவனின் பொதுவழி – தியானம்

 

தியானம் எந்த மதமும் சார்ந்தது அல்ல. மனதின் திறவுகோல் தியானம். தியானம் செய்ய மதம், இனம், மொழி, பணம், கல்வி, புகழ் எதுவும் தேவையில்லை. இறைவனிடம் செல்லும் வழியே தியானம். தியானத்தில் கிடைக்கும் அமைதி வேறு எதிலும் இல்லை. அன்பு, கருணை மனம் கொண்டவர்களுக்கு தியானம் எளிதில் கைகூடும். எல்லா உயிரையும் நேசிப்பவர்களுக்கு தியானம் விருட்ஷமாகும்.

 

சுயநலம் அற்ற சிவ சேவை செய்பவர்களுக்கு சிவனே அட்சயபாத்திரமாவார். இவர்களுக்கு தியானம் எளிதில் கைகூடும். இவர்கள் இறைவனிடம் செல்லும் பொதுவழி தியானம்.

 

தியான விதிமுறை

 

காலையில் தியானம் செய்யப் பழகவேண்டும். எந்த ஒரு இடையூரும் இருக்காது. நாள் முழவதும் பூமியில் உள்ள ஆக்ஸிஜனை நாம் உண்டு விடுகிறோம். ஆதனால் அதிகாலையில் பூமிக்கு வேண்டிய சுவாச சத்து பூமியை வந்து அடைகிறது. அதுவே பரவெளியின் அமிர்தம். இதை உண்ணவே அதிகாலை விழிக்கிறோம்.

 

தியானம் தினமும் நேரம், காலம், தவறாது செய்ய பழகவேண்டும். இறைவனிடம் நேர்முகப் பயிற்சி இது என்று பயபக்தியுடன் அமருங்கள். இப்பயிற்சியை விடாமுயற்சியுடன் செய்வீர்களானால் உங்களிடம் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் போய்விடும். தூய்மையான எண்ணச்செயல் பிறக்கும். உங்கள் மன மாற்றத்தால் உடல், முகம், செயல் தெய்வீகமாக மாறும். உங்களுக்கு நீங்களே தியான விதிமுறையை உருவாக்குவீர்கள். பின் விதிமுறையாக மாறிவிடுவீர்கள். உங்களை அற்புத மனிதனாக உலகம் காணும்.


உணவு                   :  மென்மையான உணவு, நீராகாரம்

உடை                      :  இறுக்கமற்ற தளர்வான உடை,

இருப்பிடம்             :  அமைதி, நிசப்தமான இடம் தனிமை

நேரம்                       : பிரம்ம முகூர்த்தம்

ஆணப்பலகை       : மரப்பலகை, மூங்கில்பாய்

பத்மாசனம்           :   லிங்க முத்திரை

உடல்                 : உடல் நிமிர்ந்து ரிலாக்ஸ், முதுகுத்தண்டு நேராக
                        ` : தலை நிமிர்ந்து
                           : மாதா, பிதா, குரு, தெய்வம் மனதுள்
                          : ஜபம், மூலமந்திரம், தியானம்.

 

ஓம் சிவ புவன சாந்தி
ஓம் சகல ஜீவ சாந்தி
ஓம் என மன சாந்தி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
மேலும் படிக்க
நிகழ்வுகள்

தியானேஷ்வர் நித்திய கால பூஜை விவரம்


திங்கள் - செல்வி பாக்கியலட்சுமி அவர்கள்


செவ்வாய் - திரு தயாளன் அவர்கள்


புதன் - திருமதி சுனிதா பாபு அவர்கள்


வியாழன் - திருமதி உமா காமாட்சி நாதன் அவர்கள்


வெள்ளி - திரு மோகன் அவர்கள்


சனி - திருமதி சாந்தி (உமா மகேஸ்வரி) அவர்கள்


ஞாயிறு - திரு குமரேசன் அவர்கள்


தியானேஷ்வர் அபிஷேக அலங்கார ஆராதனை


கோவில் பராமரிப்பு மேற்பார்வை

1. திருமதி லதா ராஜேந்திரன் அவர்கள்


2. திருமதி சாமுண்டீஸ்வரி பொன்னுரங்கம் அவர்கள்


அன்னதானம் சிவஸ்தல வழிபாடுக் குழு நடத்துனர்கள்


1. திரு. ரமேஸ் செல்லையா
(சிசிபில்டர்ஸ்)    Mobile:8754043401


2. திரு. பரத் குமரன் (Magic Bite)   
Mobile: 9789859857


கைலாய வாத்தியக் குழு வழி நடத்துனர்


1. திரு. சிவதாஸ்
    Mobile: 9444813781


go back to the top