Arunachaleshwarar
தியானேஷ்வர் பீடம்

தியானேஷ்வர் பீடம் அறக்கட்டளை

"உலகானது எல்லாம் சிவமானது அது உன்னையும் வெல்லும் உலகையும் வெல்லும்"

எண் : 6, காந்தி சாலை, அண்ணா நகர், பம்மல், சென்னை - 600 075.

நிறுவனர் திருமதி. எம் . ராஜேஸ்வரி ( அம்மா சிவ ராஜேஸ்வரி) செல் ; 9789062172

"அன்பே சிவம் அதுவே தபம்"

குருவின் குருவே சரணம்
ஞானத்தின் ஞானமே சரணம்
யோகியரின் யோகியே சரணம்
சித்தரின் சித்தரே சரணம்
தியானேஸ்வரா தாயே சரணம்
அம்மா சிவ ராஜேஸ்வரி சரணம்

எமது குருவைப் பற்றி:

நீண்ட ஆன்மீகப் பரம்பரையின் ஆன்மீக தேடலுக்கு ஏற்றவாறு இன்றைய அவசர உலகின் அவசிய தேவையாக சிவத்துமான சிவ உலகை தோற்றுவிப்பதின் வருகையாகும். ஞானத்தின் ஞானமாக பிரவாகம் எடுத்துவரும் சிவ சிந்தனைகள், சிவகோட்பாடுகள், ஆன்மீக வழிகாட்டுதல்கள், நன்னெறிகள், நல்லொழுக்க விதிமுறைகள் உருவாக்கங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. யோகியரின் யோகியாக வெளிவரும் யோகக் கலைகள், யோகக் கோட்பாடுகள், விதி முறைகள் மட்டுமன்றி சித்தரின் சித்தராக அதிசயிக்க வைக்கும் விளக்கங்கள் உருவாக்கல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

குருவின் குருவாக – நல்ல சீடர்கள், சிஸ்யர்கள், தொண்டர்கள் உருவாக்குதல் வழிகாட்டுதல் மட்டுமல்லாது தியானேஸ்வரராக தாயாக ஆபத்து வேளைகளிலும் துன்ப துயர வேளைகளிலும் 'அம்மா தியானேஸ்வரா தாயே' என்றழைத்தவுடன் தெளிவு தந்து மீட்கும் நமது தெய்வமாக, ஜோதியை காட்டும் எமது சற்குரு அம்மா சிவராஜேஸ்வரிக்கு சமர்ப்பணமாகும்.

தியானேஷ்வர் பீடம் அறக்கட்டளை:

உலகின் அவசியத்தை உணர்ந்த நிலையில்,- இறைவனை நோக்கிய பயணத்தில்- அனைவரையும் ஒன்றிணைத்து சிவத்துமான சிவ உலகை தோற்றுவிப்பதாகும். எமது சத்குரு அம்மா அவர்களிடம் பிரவாகமாக வெளிவரும் அனைத்து சிந்தனைகளையும் எண்ணங்களையும், கோட்பாடுகளையும் உரிமத்துடன் உலகிற்கு எடுத்துச் செல்வதாகும்.

"அன்பே சிவம் அதுவே தபம்" எனும் அம்மாவின் குறளுக்கு அமைவாக ஒவ்வொருவரையும் சிவ சிந்தனையாளர்களாகவும், சிவ தொண்டர்களாகவும், சிவபக்தர்களாகவும், சிவ யோகிகளாகவும், சிவ ஞானிகளாகவும் உருவாக்குவதாகும்.

''உலகானது எல்லாம் சிவமானது, அது உன்னையும் வெல்லும், உலகையும் வெல்லும்'' எனும் குறளுக்கு அமைவாக ஒவ்வொருவரும் தத்தமது பிரார்த்தங்களுக்கு அமைவாக தம்மையும்; வென்று உலகையும் வெல்ல வழிகாட்டுதலுமாகும்.

சத்குரு அம்மா அவர்களின் சிஸ்யர்களும், தொண்டர்களும், பக்தர்களும் இணைந்து தாங்கள் பெற்றுக்கொண்ட ஆன்மீக தேடலின் இன்ப சுக அனுபவங்களை உலக மக்கள் எல்லோரும் அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலினாலேயே மேற்படி தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளையை தோற்றுவித்துள்ளனர்.

சற்குரு அம்மா அவர்கள் சித்தர்களின் வழித்தோன்றலாகும், உலகிற்கு வரவுள்ள நற்செய்தியுடன், நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சிவ உலகை அமைப்போமாக.

தியானேஷ்வர் பீடம் அறக்கட்டளையானது முற்று முழுதான ஆன்மீகமாயமானது. இது எமது சத்குரு அம்மா சிவ இராஜேஸ்வரி அவர்களால் இறைவனிடமிருந்து தருவிக்கப்படுகின்ற விழயங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. எமது ஆன்மிக பயணமானது முக்கியமாக இரண்டு வழிகளில் முன் எடுக்கப்படுகின்றது
1) தியானம் - சிவயோகம்
2) ஆன்மPகம் - சிவஉலகம்

1. தியானம் -சிவயோகம்

நாம் வாழும் இந்த பூவுலகில் நாளும் எம்மை அறிந்திடாத பல இன்னல்களில் தினமும் சுழன்று கொண்டிருக்கிறோம். எமது அறிவுக்கு அப்பாற்பட்ட புரிந்து கொள்ள முடியாத அதிக சக்திகளின் காரணமாக இன்னோரன்ன இயற்கையின் தாக்குதலுக்கு ஆளாகி விடுகிறோம். உதாரணமாக சுனாமி, பூகம்பம், கொடூரமான மழை, கொடூரமான வெயிலின் தாக்கம் போன்றவையும், எம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கான நோய்களும், மனஅமைதியின்மையும், துன்பங்களும், நம்மை தினமும் வாட்டி வதைப்பதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து நாம் விடுதலை பெறவேண்டும். நாம் சுபீட்சமாகவும் சந்தோஷமாகவும் மன நிறைவுடனும் வாழ வேண்டும். எனும் சீரிய நோக்கில் இறைவனிடமிருந்து தருவிக்கப்பட்ட மிகப்பெரிய இயற்கைச்செல்வம், அனைத்திற்கும் தீர்வாக சத்குரு அம்மாவினால் யோகி தியானேஸ்வரால் தருவிக்கப்பட்ட தியானம் எனும் அருமருந்தான சிவயோகம் எனும் கலையாகும். சித்தர்களாலும் தேவர்களாலும் போற்றப்பட்டதும், சிவனால் அருளப்பட்டதுமான கலையாகும். இக் கலையினை எமது சத்குரு அம்மா அவர்களால் அவரவர் பிரார்த்த விதிகளுக்கு அமைவாக தீக்க்ஷை-யாக வழங்கப்பட்டு முறையான பயிற்சியும் தரப்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் நாம் வாழும் இந்நாளில் இதனை முறையாகப் பயின்று அவரவர் தம் வாழ்வில் முழுமையான சந்தோசத்துடனும் மன அமைதியுடனும் வாழ வரவேற்கின்றோம்.


2. ஆன்மீகம் - சிவஉலகம்

இன்றைய அவசர உலகில் நாம் எல்லோரும் எப்படியும் வாழ்ந்து விடலாம் என ஓர் சிலரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்றும் ஓர் சிலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய நவீன உலகின் அதி உயர் விஞ்ஞான வளர்ச்சியில் இந்த நிமிடம் வரையிலும் நம்மால் அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு அப்பால் இயற்கையின் மாபெரும் சக்தியின் அரிய அற்புத ஆற்றல்கள் உண்டு என்பது யாரும் மறந்துவிட முடியாத உண்மை ஆகும். மேலும் இயற்கையின் மிகப் பெரிய சக்தி உண்டு என்பதும் இது வரையிலும் சாதாரன மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடியாது என்பதும் உலகம் அறிந்த உண்மை. இத்தகைய மாபெரும் சக்திகள் யாவும் சித்தர்களுக்கும் முனிவர்களுக்கும் மட்டுமே புரிந்த விடயமாகவே இருந்திருக்கிறது. அந்த வகையில் எமது சத்குரு அம்மாவின் வருகையும் இறைவனிடமிருந்து . தருவிக்கப்படுகின்ற விஷயங்களிலும் எம்மால் ஓர் புதுமையை உலக அதிசயத்தை உணரமுடிகிறது. அந்த வகையில் எமது சத்குரு அம்மா அவர்களால் முன்னெடுத்துச் செல்கின்ற ஆன்மீகம்- வழி காட்டுதல்களை நாம் பின் தொடருவோமாயின், சத்குரு அம்மா அவர்களால் சென்று கொண்டிருக்கின்ற சிவ உலகத்திற்குள்- நாம் ஒவ்வொருவரும் சென்று ஓர் அற்புதமான புனிதமான தெய்வீகமான அமைதியான - சிவ உலகைப் படைத்திட முடியும்.
இறுதியாக எமது சத்குரு அம்மாவினால் இறைவனிடமிருந்து தருவிக்கப்பட்டு முன்னெடுத்துச் செயல்படுகின்ற விஷயங்களை- நாம் எப்போதும் ஒன்றிணைந்து தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை எனும் ஓர் கட்டுக்கோபhன அமைப்பினுடாக முன்னெடுத்துச் செல்கின்றோம். எமது அனைத்து அன்பு உள்ளங்களும் ஒன்றிணைந்து இந்த அறக்கட்டளையூடாக புதியதோர் உலகைக்கான ஒன்றிணைந்து தியானம்-சிவயோகம்.
ஆன்மீகம்-சிவஉலகம் படைத்திடுவோமாக என்றும் அன்புடன்
தியானஸ்வர் பீடம் அறக்கட்டளை
சத்குரு அம்மாவின் சிஸ்யர் ராஜா

NOTICE

Dear Devotees, Thiyaneswar Peedam Charitable Trust cordially invites you and your family for the

Bhoomi Pooja Function

of

"Sathguru Shiva Rajeswari Amma Ashram"

Date & Time : 24-11-2014, Monday – 11 AM
Place : Adi Annamalai, Vediyappan Area, Tiruvanamalai.
Looking forward to your esteemed presence with family and friends on this auspicious occasion.
More Information Contact: 9789062172, 9444070887,9840235508

அறிவித்தல்

அனைத்து சிஸ்யர் கள் தொண்டர் கள் ஆன்மிக அன்பர் கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்,
எமது அறக்கட்டளை சார் பாக திருவண்ணாமலை, அடி அண்ணாமலை, வெடியப்பன் பகுதியில், எதிர் வரும் 24-11-2014 திங்கட் கிளமை காலை 11.00 மணியளவில் சத்குரு சிவராஜேஸ்வரி அம்மா ஆஸ்ரமம் கட்டுவதற்கான பூமி பூஜை நடை பெறவுள்ளதால், அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். மேலும் தொடர் புகளுக்கும், தகவல்களுக்கும்; :
தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
நிர்வாகம்

email : www.arunachaleswar.in
face book: facebook.com/arunachaleswar
mobile : 0091-9789062172,0091-9444070887,
0091-9840235508

  • ஸ்தாபகர் / தலைவர் : திருமதி M. இராஜேஸ்வரி
  • செயலாளர் : திரு K. ராஜா
  • பொருளாளர் : திரு G. மோகன்
  • செயல் உறுப்பினர்கள் : 1.திரு ரமேஷ் செல்லையா
  • 2 .திருமதி ராதிகா- மணி
  • 3. திருமதி உமா மகேஸ்வரி- உமாநாதன்
  • 4. திரு சுனிதா - பாபு
  • 5. திருமதி கனக குமாரி
  • 6. திரு சிவ தாஸ்
  • 7. திரு . கோவிந்தராஜ்

தியானேஷ்வர் பீடம் அடக்கட்டளை
திருவண்ணாமலை அடி அண்ணாமலையில் அமையப் பெற இருக்கும் ஆஸ்ரமம்

மதிப்பீடு 1

1. 10 சென்ட் மனை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

2. 32 அடி அகலம் 120 அடி நீளம்

3. மனையை சுற்றி வேலி அமைத்தல் -                      70,000.00

a. அன்னதான மதிப்பீடு போஸ்ட் + நெட்வலை + அமைப்பு உள்பட + கேட் அனைத்துமாக மொத்தமாக (190' நீளமானது)                                     90,000.00

b. மனையினுள் குழாய் கிணறு அமைத்ததல் -                      50,000.00 (200' மேல)

4. மின் இணைப்பு -                      10,000.00

5. TOILET + BATHROOMS எண்ணிக்கை 5 -                      60,000.00

6. தற்காலிக சிறு குடில்-                       30,000.00

7. தியானேஸ்வர் பிரதிஸ்டை சிறுகோயில் அமைப்பு-                      40,000.00
8. கட்டிடம்

கட்டிடம் தளப்பகுதி அமைப்பு

A-1 அலுவலகம்

மற்றும் 2 ரூம்கள்

30 * 3 சதுரம் 300 சதுரம்

300*1500-                       45,0000.00
B-1 KITCHEN + DINING HALL + 5 ROOMS 100*10 = 1000 சதுரம் 1500-                       15,00,000.00

மேலே தரப்பட்டவை அண்ணளவினதான மதிப்பீடுகளே

A-1 அலுவலகம்

சத்குரு அம்மா குடில்

மதன் குடில்

A-1 முதல் தளம் - தியான மண்டபம்

A-3 இரண்டாவது தளம் - ஒன்று கூடல்

B-1 5 தங்கும் விடுதிகள்

உணவு பகுதி

சமையல் பகுதி

B-2 1-வது தளம் 10 தங்கும் விடுதிகள்

B-3 2-வது தளம் 10 தங்கும் விடுதிகள்                             2800000.00

Floor Plans

GROUND FLOOR   

FIRST FLOOR   

SECOND FLOOR   

தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஷ்வர் பீடம் அறக்கட்டளை
மேலும் படிக்க
நிகழ்வுகள்

தியானேஷ்வர் நித்திய கால பூஜை விவரம்


திங்கள் -திருமதி லதா ராஜேந்திரன் அவர்கள்


செவ்வாய் - திரு தயாளன் அவர்கள்


புதன் - திருமதி சுனிதா பாபு அவர்கள்


வியாழன் - திருமதி உமா காமாட்சி நாதன் அவர்கள்


வெள்ளி - திரு மோகன் அவர்கள்


சனி - திருமதி சாந்தி (உமா மகேஸ்வரி) அவர்கள்


ஞாயிறு - திரு குமரேசன் அவர்கள்


தியானேஷ்வர் அபிஷேக அலங்கார ஆராதனை


கோவில் பராமரிப்பு மேற்பார்வை

1. திருமதி லதா ராஜேந்திரன் அவர்கள்


2. திருமதி சாமுண்டீஸ்வரி பொன்னுரங்கம் அவர்கள்


அன்னதானம் சிவஸ்தல வழிபாடுக் குழு நடத்துனர்கள்


1. திரு. ரமேஸ் செல்லையா
(சிசிபில்டர்ஸ்)    Mobile:8754043401


2. திரு. பரத் குமரன் (Magic Bite)   
Mobile: 9789859857


கைலாய வாத்தியக் குழு வழி நடத்துனர்


1. திரு. சிவதாஸ்
    Mobile: 9444813781


இணையத்தளம் பராமரிப்பு (WebSite maintenance & Creation)


1. திரு. ரா . முருகன்
    Mobile: 9791872180


go back to the top