Arunachaleshwarar
என் அரசன்

ஓம் பரி பூரணத்துவ மாதா
ஓம் பரி பூரணத்துவ பிதா
ஓம் பரி பூரணத்துவ குரு
ஓம் பரி பூரணத்துவ தியானேஸ்வர்


என் அரசன்


அண்ணவர்க்கோன் அரசன்
அனலாக நின்றி இருப்பவன்
அருணாசலம்இ அருணையில்
அம்பல மாக்க தன்னை
அருள் ஜோதியாக எழுந்தான்
அம்மையும் அப்பனுமாக
அருள் செய்தும் ஆண்டான்
ஆண்டவன் என் அருணாசலனே.

தேடியது


தேகம் நொந்திட வந்தேன்
தேடி வந்தாய் என்னுள்ளே
தேகமும் தீயாகியது
தேடிய திரவியம் என்னுள் வந்தது.
என தேகமும் தேடியவனும் அருனையனே
தேடியவன் வந்தால் என்னை
ஆண்டவன் அருணாச்சலனே

திகம்பரன்


திக்கு எங்கும் திகழ்பவன்
திகம்பரன்அன்பன்
திகைக்க வைத்தான் தீபசுடராக
தி தொன்றும் இல்லாது இருந்தேன்
தீண்டிய திழைக்க வைத்தான்
திங்களை சூடியவன்
என்னையும் சூடியது அருணாச்சலனே.

மதிமுகம்


மங்களமானவன் மதிமுகம் காட்டி
மறைபொருளாக மதியின் புக்க
மண்றாடினேன் மதிபாலனாக
மலர்முகம் காட்டியே அழைத்தான்
மன அன்பனின் அன்பில் நடந்தேன்
மனம் எல்லாம் அவனாக நின்றான்
மஹாதேவன் என் அருணாச்சலனே!

அன்பன


அழைத்தான் அருணைக்கு
அவன் அடியார் மூலமாக
மூலம் எதுவென்று ஆராய
மூலப் பொருள் தர அழைத்தான்
என்பது தான் சூட்சுமம்
;சூட்சுமமாக அழைத்த அடியாரே
அவர் அன்பரின் அன்பர்
அன்னவர்கோன் அழைப்பு
தீர்த்த மழையால் மூலம் என்பது
அருணைக்கு அழைத்து அருணாச்சலனே

இறைவிருப்பம்


நற்பொருள் நற்காரியம்
நல் என்செயல் யாவும் அவன் விருப்பம்
செய் கடன் முன் செயல்படுத்த
முன்நின்றே அழைத்தான்
கர்மம் துலைக்க வா வா என்றே
நின்று அழைத்தே கூட்டி சென்றான்
கூட்டி சென்றவன் அருணாச்சலனே

ஜோதிலன


மாமலையானும் மலைத்தான்
மலைசுற்றும் "அம்மாவை" நினைத்து
மன்னித்தருள வேண்டியாக
மலைசுற்று அது
மண்ணில் மீண்டுவராது இருக்க
மாமலையானை மறவாது இருக்க
மாயை செய்யாது இருக்கவே
மலையான் ஜோதியாய் காட்டிநின்றான்
மாமலையாய் நின்றவன் அருணாச்சலனே

மலையான


கண்கள் உன்னை காண
என்னை தபம் செய்ததுவோ
கண்டு உணர்ந்த கடவுள்
கடந்தே நின்று அது மலையாய்
மலையனும் மதி நுட்பமாய்
மண்ணின் உயிர் அடங்கும்
இடமும் உச்சியில் ஜோதியாய்
என்உயிர் கலக்க நினைத்த
ஜோதி மாமலையில் உச்சிதனில்
உச்சி முகர்ந்து ஏற்கவே
மெச்சிவாழ்வேன் யான்
ஆட்கொள்ள வருபவன் தென்னவன்
என்னவனும் அருணாச்சலனே!

மனங்கவர்


அங்கங்கள் கரைய கண்டேன்
கரைந்த இடமே கடவுள்
கடந்து சென்றால் தெரிவான்
அல்லேன் கடந்து உள் இருந்தால்
தெரிவான் தெளிந்தவனும்
தெரிவிக்கவே வந்தவன்
என் மனம் பிடித்த அருணாச்சலனே
துணை எனவந்தான் துhயவன்
என் துன்பந்தான் தீர்க்க
துழைத்த இடமூம் மனம் அருணாச்சலனே!

சத்குரு அம்மா (குரு தரிசனம் ) நிகழ்வுகள் : திருவண்ணாமலை அன்னதானம் மற்றும் கிரிவல சிவதல வழிபட்டு குழு நடத்துனர்கள் திரு . ரமேஷ் பில்டர் மற்றும் திரு. பரத் (magic bite )

 

ஓம் சிவ புவன சாந்தி
ஓம் சகல ஜீவ சாந்தி
ஓம் என மன சாந்தி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
மேலும் படிக்க
அன்னதானம்

பிரதி பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்கபடுகிறது

15-1-2015 புதிய தருவிப்பு
புதிய செய்தி

சிவம்--சிவன்

15-10-2014 தருவிப்பு
புதிய செய்தி

அறிவித்தல்(தியானேஸ்வர் பீடம்)

சத்குரு சிவராஜேஸ்வரி அம்மா-வின் வருகையின் மகிமை(சத்குரு அம்மா)

15-09-2014 தருவிப்பு
புதிய செய்தி

முதல் தேடல்(இறைவனை தேடுபவர்களுக்கு ஒரு அற்புதமான தருவிப்பு

அம்மாவின் கைவண்ணம்

1-09-2014 தருவிப்பு
புதிய செய்தி

அம்மாவின் பாடல்கள்

1-06-2014 தருவிப்பு
செய்தி

சத்குரு அம்மா (குரு தரிசனம் )

தியானேஸ்வர்: மெளனயோகி ஆறுநாட்கள் ஒளி

தியானம்: என்தேகமே     சிவார்ப்பணம்

தியானம்: சிவமே சிவமங்களம்

15-03-2014 தருவிப்பு
செய்தி

திருவண்ணாமலை ஜோதி(தீப தரிசனம்)இரகசியம்

யோகி தியானேஷ்வர் சிவ குரு (இறைவனை குருவாக பாவித்தல்)

தியானம் -குரு (விசேட பார்வை )

go back to the top